- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

எடப்பாடி பழனிசாமி அணியில் யார்-யாரெல்லாம் சிலீப்பர் செல்கள்?
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 134 பேரில் 113 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், 21 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.
தினகரனை ஆதரிக்கும் 21 எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் கட்சி விதிகளை மீறி விட்டதாக கூறி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சட்ட சபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின்பலம் 116 ஆக குறைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். கட்சியை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத் துடன் அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.’
அவர்கள் அடிக்கடி “எங்களுக்கு ஆதரவு தெரி விக்கும் 8 அமைச்சர்கள், 17 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளனர். அவர்கள் “சிலிப்பர் செல்” போல இயங்கி வரு கிறார்கள். தேவைப் படும் போது அவர்கள் அங்கிருந்து விலகி எங்கள் அணிக்கு வருவார்கள்” என்று கூறி வருகிறார்கள்.
தினகரன் தரப்பில் இப்படி கூறப்பட்டாலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் யாரும் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து மாறவில்லை. எனவே சிலிப்பர் செல் போல வேறு யாரும் இருக்க வாய்ப்பு இல்லை என்று கரு தப்பட்டது. 98 சதவீத பொதுக்குழு- செயற்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதால் சிலிப்பர் செல்கள் பற்றிய பரபரப்பு ஓய்ந்திருந்தது.
இந்த நிலையில் நடராஜனை பார்ப்பதற்காக பரோலில் சசிகலா வெளியில் வந்துள்ளதால் மீண்டும் “சிலிப்பர் செல்” பற்றிய பரபரப்பு எழுந்துள்ளது. அதுவும் நேற்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்தபோது சசிகலாவுக்கு ஆதரவாக பேசினார். ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலாதான் என்று புகழ்ந்தார்.
சசிகலாவை பெயர் சொல்லாமல் “சின்னம்மா” என்று கூறிய அவர் பிறகு “மாண்புமிகு சின்னம்மா” என்று தெரிவித்தார். இதை யடுத்து அவர் சிலிப்பர் செல்களில் ஒருவராக இருக்கலாம் என்ற சந்தேகம் அ.தி.மு.க.வினரிடம் ஏற்பட் டுள்ளது.
டி.டி.வி.தினகரன் தரப்பினர் இதை உறுதிபடுத்தும் விதமாக “சிலிப்பர் செல்”கள் வெளிவரத் தொடங்கி விட்டனர்” என்று கூறியுள்ளனர். இதனால் அ.தி.மு.க. வில் வேறு யார்-யாரெல்லாம் சிலிப்பர் செல்களாக உள்ளனர் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இதற்கிடையே அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பாராளு மன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோரும் சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். சசிகலா பரோலில் வந்தால் அவரை சந்தித்துப் பேசுவேன் என்று ஓ.எஸ்.மணியன் கூறியது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர மேலும் சில அமைச்சர்களும் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் சசிகலாவை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சந்திக்க முன்வர வில்லை என்று கூறப்படுகிறது. இவர்களில் சிலர் சசிகலாவுடன் போனில் பேசியதாக உறுதி செய்யப்படாத ஒரு தக வல் வெளியாகி இருக்கிறது.
எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் சிலிப்பர் செல்களாக இருப்பதாக டி.டி.வி.தினகரன் தரப்பினர் சொல்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியில் பெரும் பாலானவர்கள் இருப்பதால் சிலிப்பர் செல்களில் சிலர் மனம் மாறி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சிலிப்பர் செல் குறித்த தகவல்கள் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை ஒருவர் “இவர் சிலிப்பர் செல்” ஆக இருக்குமோ? என்று சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக பேசுவது கூட குறைந்து போய் விட்டது.