- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

எங்கள் ஆட்சியிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என்ற காங்கிரசை கலாய்த்த பிரதமர் மோடி
இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும்போது எல்லாம் என்னுடைய அரசு எல்லைத் தாண்டிச் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறது என பிரதமர் மோடி கூறி வருகிறார். காங்கிரஸ் ஆட்சியின்போது ராணுவத்திற்கு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு கால இடைவெளிகளில் பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது, எங்களைப் பொறுத்தவரையில் ராணுவ நடவடிக்கை என்பது ஒரு வியூக நடவடிக்கையாக இருந்தது. இந்தியாவிற்கு எதிரான படைகளுக்கு எதிராகவே மேற்கொண்டோம், ஆனால் அதனை வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தவில்லை எனக் கூறினார்.
இந்நிலையில் எங்கள் ஆட்சியின்போது 6 சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் தகவல் வெளியிட்டது. காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல் தாக்குதல் ஜூன் 19, 2008-ல் பூஞ்சின் பாத்தால் செக்டாரில் நடத்தப்பட்டது. இரண்டாவது தாக்குதல் ஆகஸ்ட் 30-செப்டம்பர் 1, 2011-ல் நீலம் ஆற்றுப்படுகையில் உள்ள சார்தா செக்டாரில் நடத்தப்பட்டது.
ஜனவரி 6, 2013-ல் சுவான் பாத்ரா செக்போஸ்ட் பகுதியில் நடத்தப்பட்டது. மற்றொரு தாக்குதல் ஜூலை 27 மற்றும் ஜூலை 28, 2013-ல் நசாபியர் செக்டாரில் நடத்தப்பட்டது. ஐந்தாவது தாக்குதல் நீலம் பள்ளத்தாக்கில் ஆகஸ்ட் 6, 2013ல் நடத்தப்பட்டது, ஆறாவது தாக்குதல் ஜனவரி 14, 2014-ல் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், நாங்களும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினோம் என்று கூறுவது இது முதல்முறை கிடையாது. முதல்முறையாக தேதி விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் எங்கள் ஆட்சியிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என்ற காங்கிரசை பிரதமர் மோடி கலாய்த்துள்ளார். ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், 4 மாதங்களுக்கு முன்பு, ஒரு காங்கிரஸ் தலைவர், தங்களது ஆட்சியில் 3 தடவை துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார். தற்போது, மற்றொரு தலைவர் 6 தடவை துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகிறார். தேர்தல் முடிவதற்குள், இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தாலும் உயரும். அவர்கள் காகிதத்தில்தான் துல்லிய தாக்குதல் நடத்தினர். அதனால் என்ன பயன்?
பா.ஜனதா ஆட்சியில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டபோது, அதை காங்கிரஸ் தலைவர்கள் முதலில் கேலி செய்தனர். பிறகு நிராகரித்தனர். பின்னர், எதிர்த்தனர். தற்போது, நாங்களும் தாக்குதல் நடத்தினோம் என்று கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது எல்லாமே பொய். இந்த தலைவர்கள் வீடியோ கேம் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அதில், துல்லிய தாக்குதலை ரசித்தவர்கள், அதை ஒருவகை விளையாட்டு என்று கருதி விட்டார்கள் போலும் எனக் கூறியுள்ளார்.