Go to ...
Canada Uthayan Tamil Weekly
* கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி    * நடிகைகள் பாலியல் புகார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரண்    * குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த்- எடியூரப்பா    * ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, May 25, 2018

ஊர்காவற்றுறை பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை அபகரிப்பதில் கடற்படையினர் முயற்சி


ஊர்காவற்றுறை பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையினர் அபகரிப்பதில் ஈடுபட்டிருந்ததைக் கண்ட காணி உரிமையாளர் அதனை எதிர்த்துள்ளார். எனவே அந்த உரிமையாளரை, கடற்படையினர் அச்சுறுத்தியுள்ளனர். இந்த அச்சுறுத்தல் தொடர்பில் மனித வுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் கடந்த வாரம் முறைப் பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடற்கரை வீதி, பருத்தியடைப்பு, ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள இரண்டு பரப்பு காணியை சுவீகரிப்பதற்காக காணி அளவீட்டு பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அதற்காக தங்களோடு ஒத்துழைக்கும் வண்ணமும் மேற்படி காணியின் உரிமையாளருக்கு யாழ்.மாவட்ட நில அளவை திணைக்கள த்தினரால் கடந்த 10ஆம் திகதி அறிவிக்கப்ப ட்டிருந்தது. தனது காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடுவதற்கு ஆதரவு தருமாறு காணி உரிமையாளர் அயல்;பகுதி மக்களி டம் ஆதரவு கோரியுள்ளார். இதனை அறிந்த கடற்படையின் புலனாய்வு பிரிவினர் கடந்த 23ஆம் திகதி பொதுமக்களை அழைத்து கூட்டம் கூட வேண்டாம் என மிரட்டியுள்ளனர்.
இதனை அடுத்து மறுநாள் 24 ஆம் திகதி காலை காணி உரிமையாளரை தொலை பேசி ஊடாக தொடர்பு கொண்ட கடற்படை புலனாய்வு பிரிவினர், காலை மண்கும்பான் கடற்படை முகாமுக்கு வரு மாறு அழைத்துள்ளனர். இதனால் அச்சமடை ந்த காணி உரிமையாளர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியால யத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள் ளார். எனினும் போரா ட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட புலனாய்வு பிரிவினர் குறித்த போராட்டத்தை கைவிடுமாறு அச்சுறுத்தியுள்ளனர். அச்சுறுத்தலை மீறியும் போராட்டம் நடைபெற்ற போது போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த புலனாய்வு பிரிவினர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வருகை தந்த வாக னங்களின் இலக்கத்தகடுகளின் எண்களை குறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்தில் உள்;ளனர். எவ்வாறாயினும் காணி சுவீகரிப்பு முயற்சி கைவிடப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2