உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழர் பகுதிகளில் நிலையான மாற்றங்களை தோற்றுவிக்க வேண்டும்

இந்திய தேசத்தில் பல மாநிலங்களில் உள்ள அரசுகளை கைப்பற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எத்தனை கோடிகளை கொள்ளை அடிப்பது என்பதையே மிகவும் முக்கிய விடயமாகக் கொண்டு தங்கள் நாளாந்த அரசியலை நடத்தி வருவார்கள். இதற்கு தமிழ்நாடும் விதி விலக்கு அல்ல என்பதை நாம் நன்கு அறிவோம். தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் அவரது தோழியாக இருந்த சசிகலாவும், லட்சத்துக் கோடிகளை கொள்ளையடித்து பாதுகாத்து வைக்கும் அளவிற்கு அங்கு அரசியிலில் ஓட்டைகள் இருந்திருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு மாறி மாறி வரும் ஆளுனர்கள் (கவனர்கள்) கூட கோடிக்கணக்கில் சம்பாதித்த பினனர் தான் அந்த மாநிலத்தை விட்டுச் செல்வார்கள் என்பதும் அங்கு நிதர்சனமாகத் தெரியும் உண்மை.

ஷஇவ்வாறு தமிழ்நாட்டில் அரசியல் மூலம் கோடிக்கணக்கில சொத்துக்களையும் பணத்தையும் கொள்ளையடித்திருந்ததை செய்திகள் மூலமும் படங்கள் மூலமும் நன்கு தெரிந்து கொண்டாலும் மக்கள் முன்பாக அவர்கள் கட்சி வேட்பாளர்கள் மீண்டும் தேர்தல்களில் போட்டிய்pடுவதற்கு துடியாய்த் துடிக்கின்றார்கள். இவ்வாறான ஒரு நிலை எதிர்வருமட் தேர்தல்களில் இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் வந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்துவதே எமது இவ்வாரக் கதிரோட்டத்தின் நோக்கமாகும்.

தேர்தலில் வெற்றி பெறுவது, அதற்கான வாக்கு வங்கி ஒன்றைத் தொடர்ந்து பாதுகாப் பது, உள்ளூராட்சி சபை உறுப்பினராக இருந் தால் அடுத்த முறை மாகாண சபை உறுப்பின ராக வருவது, மாகாண சபை உறுப்பினராக இருந்தால் எப்பாடுபட்டாவது அடுத்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராவது, அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவது இந்த இல க்கை அடைவதற்காக யார் யாரையயல்லாம் பந்தம்பிடிக்க வேண்டுமோ அவர்களைப் பந்தம் பிடிப்பது என்பதாகவே இன்றைய தமிழ் அரசி யல் நிலைமை உள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் இவ்வாறான “மட்டமான” அரசியல் தாண்டவமாடுகி;ன்றது என்பதை எமக்கு கிடைக்கும் தகவல்கள் சொல்லி நிற்கின்றன.

தமிழ் மக்களின் உரிமை, தமிழ் மக்களின் வாழ்வியல் பற்றி எந்தச் சிந்தனையும் தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளிடம் இல்லை எனலாம்.
இதன்காரணமாக நம் தமிழ் இளைஞர்கள் மிகுந்த வெறுப்பு நிலையில் உள்ளனர் என்பதும் அதுபற்றி எதுவும் அறியாதவர் களாக தமிழ் அரசியல்வாதிகள் இயங்குவதும் எதிர்காலத்தில் மிகமோசமான எதிர்விளைவு களை ஏற்படுத்தும் என்பது நிச்சயமாக கணிக்கப்பட்ட உண்மையாகும்.

எமது பெரும் விடுதலைப் போராட்டம் தோற்றுப் போனதன் பின்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை அடையாளப்படுத்தியதாயினும் அவர்கள் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து போவதும் ஆட்சியாளர்களைக் காப்பாற்றுவதுமே தமது மிகப்பெரிய பணி என்பது போல நடந்து கொண்டனர். இதற்காக அவர்களுக்கு பெருமளவில் சன்மானங்களும் அன்பளிப்புக்களும் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருவது தெளிவாகத் தெரியும் உண்மை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டங்கள் நடக்கின்ற வேளைகளில் அங்கு செல்கின்ற இளைஞர்கள் தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்கின்ற கேள்விகள் அவர்களைத் திக்கு முக்காடவைக்கிறது.இப்படியே நிலைமை கடந்து செல்லுமாக இருந்தால் தமிழ் மீது; தமிழ் மக்கள் மீது பற்றும் பாசமும் கொண்ட இளைஞர் சமூகம் அந் நிலையில் இருந்து மெல்ல மெல்ல விலகி வேறொரு பாதையில் தமது கவனத்தை – ஆர்வத்தைச் செலுத்துவர்.

அரசியல்வாதிகளால் எங்கள் தமிழ் இளை ஞர்களின் மனநிலையை உணர முடியவில்லை என்றால், எங்கள் மூத்தவர்களாவது தமிழ் இளைஞர்களின் இனம், மொழிப்பற்றுக்கு உற் சாகம் கொடுத்து அவர்கள் தமிழ் உணர்வோடு; தமிழ் இனப்பற்றோடு வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும்.அதில் ஒரு முக்கிய விடயமாக தமிழ் இளை ஞர்களை நேர்மையான அரசியல் பாதைக்கு அழைத்து வருவது காலத்தின் ஒரு கட்டாயமாகவே பார்க்கப்படுகின்றது. இதற்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமாகும் என்பதையும், முழுப்பூசணிக்காயையும் சோற்றுக்குள் புதைப்பது போன்ற கருத்துக்களை தொடர்ச்சியாகக் கூறி எமது மக்களை ஏமாற்றிய வண்ணம் அரசாங்கத்தை காப்பாற்றி வரும் சுமந்திரன் போன்றவர் இனிமேல் பாராளுமன்றப் பதவிகளை அலங்கரிப்பதிலிருந்து அகற்ற வேண்டியது ஒரு அவசியமான பணியும் கட்டாயமும் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும். இதுவே இன்றைய தேவை.