உலகின் வயதில் மிக அதிகமானவர் என்ற புகழுக்குரியவரான ஜப்பானியர் காலமானார்

உலகில் மிகவும் வயதான நபர் என்று அறிவிக்கப்பட்டிருந்த மசாஸோ நோனாக்கா ஜப்பான் நாட்டில் தனது 113ஆவது வயதில் கடந்த வாரம் காலமானார்.

உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது.
அவ்வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக அதிக காலம் வாழ்ந்த நபராக அறியப்படுகிறார். 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்த இவர் கடந்த 1997ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.