உலகம் செய்தி பிலிப் இறுதி ஊர்வலத்தில் ஹாரி; வியப்பில் பிரிட்டன் மக்கள்

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியாக அமெரிக்காவில் வசித்துவரும் ஹாரி, தற்போது தாத்தா பிலிப் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்துள்ளார்.

கடந்த ஆண்டு பிரிட்டன் அரச குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகியோர் குழந்தை ஆர்ச்சியுடன் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து அமெரிக்காவில் குடியேறினர். அங்கு தொழில் செய்து வந்த அவர்கள், சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய கருத்து பிரிட்டன் அரச குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹாரி-மேகன் தம்பதி, அரச குடும்பத்தில் மேகன் மார்கலிடம் இனப்பாகுபாடு கட்டப்பட்டதாகத் தெரிவித்தனர். மேலும் அரச குடும்ப உறுப்பினர் ஒருவர், மேகனுக்குப் பிறக்கும் குழந்தையின் நிறத்தை விமர்சித்ததாக அவர்கள் கூறினர்.

இது பிரிட்டன் அரசு குடும்பத்தின்மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடும் அதிருப்தி அடைந்த ராணி இரண்டாம் எலிசபெத், ஹரி- மேகன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அரச குடும்பத்திலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார். இதுகுறித்துப் பேசிய ஹாரியின் மூத்த சகோதரர் வில்லியம், அரச குடும்பத்தில் யாரும் கருப்பின மக்களிடம் பாகுபாடு காட்டுவது இல்லை என்று கூறினார்.

இவ்வாறாக ஹரிக்கும் அரச குடும்பத்திற்கும் தொடர் மோதல்போக்கு நீடித்து வந்த நிலையில் ஹரியின் தாத்தா பிலிப் தனது 99வது வயதில் காலமானார். இவரது இறுதி ஊர்வலத்துக்கு பிரிட்டன் அரசு பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த நிலையில் இந்த ஊர்வலத்தில் பங்கேற்க தற்போது விமானம் மூலமாக அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு ஹாரி வந்துள்ளார்.

கொரோனா தாக்கத்தின் காரணமாக தற்போது தனிமைப்படுத்தப்பட்ட ஹாரி ஊர்வலத்தில் கலந்துகொள்வார் என செய்தி வெளியாகியுள்ளது. அவரது மனைவி, மகன், மகள் தற்போது இரண்டாம் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு இருப்பதால் அவரால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.