உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017 ஆகஸ்ட் 5ம் 6ம்
திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.
யாழ்பபாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாட்டின் மாநாட்டுத் தலைவராக தமிழ் நாட்டைச் சேர்ந்த முனைவர் பாஞ் இhமலிங்கம் அவர்களை இயக்கத்தின் பொதுக்குழு தெரிவு செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இயக்கத்தின் அகிலத் தலைவராக கனடா வாழ் திரு வி. துரைராஜாவும் செயலாளர் நாயகமாக ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும் சர்வதேச ஊடகப் பொறுப்பாளராகவும் மாநாட்டின் கனடாவிற்குரிய செயற்பாட்டுக் குழுவின் தலைவராகவும் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் இயக்கத்தின் வட அமெரிக்க ஒன்றியத்தின் தலைவராக கனடா வாழ் திரு சிவா கணபதிப்பிள்ளையும் பணியாற்றுகின்றனர்.
மேலும் நூற்றுக்கணக்கான நிர்வாக உறுப்பினர்களும் தொண்டர்களும் கல்விமான்களும் உலகின் பல நாடுகளிலும் இலங்கையிலும் இந்த மாநாடு வெற்றி பெரும் முகமாக உழைத்து வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இந்த 13வது மாநாடு யாழ்ப் பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறுவதற்கு புதிய துணைவேந்தர் ஒப்;புதல் அளித்துள்ளார். எனவே மாநாட்டுக் குழுவினர் தீவிரமாக பணிகளை ஆற்றத் தொடங்கியுள்ளனர்.
இந்த மாநாட்டை நடத்துவதற்கு சுமார் 40 இலட்சம் இலங்கை ரூபாய்கள் தேவைப்படுகின்றன. இதில் பெரும்பகுதியை எமக்கு வழங்கியுள்ள நிறுவனம் கனடாவில் தமிழ் மகன் திரு மதன் அவர்களால் நிர்வகிக்கபபடும் TEKNO MEDIA INC என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. TEKNO MEDIA INC நிறுவனம் தான் இந்த மாநாட்டின் முதன்மை அனுசரணையாளர்கள் என்பது குறித்து நாம் திரு மதன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிககின்றோம்.
இந்த 13வது மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் பொது அறிவிப்பும் எதிர்வரும் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 7.00 மணிக்கு ஸ்காபுறோ நகரில் 5310 Finch Avenue East – Unit 10 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Prima Dance School மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
எனவே மேற்படி அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைத்து ஊடக நண்பர்களையும் அறிஞர் பெருமக்களையும் அழைக்கின்றோம்.
இங்கனம்
கனடாவிற்குரிய மாநாட்டு செயற்பாட்டுக் குழு
தொடர்புகளுக்கு
ஆர். என். லோகேந்திரலிங்கம்- 416 732 1608
வி. துரைராஜா 647 829 4044
சிவா கணபதிப்பிள்ளை -416 899 6044