- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

நடிகர் விஜய் ரூ.5 கோடி வரி ஏய்ப்பு : உறுதி செய்தது வருமான வரித்துறை
தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள், நேற்று கூறியதாவது:நடிகர்கள், விஜய், சமந்தா மற்றும் நயன்தாரா உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட, திரைத் துறையினரின் வீடுகளில், 2015 அக்டோபரில், வருமான வரி சோதனை நடந்தது. அதில், 25 கோடி ரூபாய்க்கும் மேல், வரி ஏய்ப்பு செய்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, நடிகர் விஜய், புலி படத்தில் நடித்ததற்காக பெற்ற, சம்பளத்தில், ஐந்து கோடி ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டவில்லை. இது, சோதனையில் உறுதியானது. அதை ஏற்ற விஜய், அதற்குரிய வருமான வரியை செலுத்தினார். வரி ஏய்ப்பு செய்த மற்றவர்களிடமும், வருமான வரி வசூலிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வருமான வரி ஏய்ப்பு செய்தோர், அதற்குரிய வரி செலுத்திய பின், வரி ஏய்ப்பு தொகை மற்றும் அதற்கான வட்டியும் சேர்த்து, ‘காம்பவுண்டிங் டேக்ஸ்’ எனப்படும், கூடுதல்
வரி செலுத்த வேண்டும். 2015ல், விஜய் வீட்டில் சோதனை நடந்த போது, ‘உங்கள் மீது, ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது’ எனக் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்பினோம்.
பின், அவர், கூடுதல் வரி செலுத்துவதற்கான ஆவணத்தை, 2016 துவக்கத்தில் தாக்கல் செய்தார். அந்த வரியை செலுத்தியதால், அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், ‘காம்பவுண்டிங் டேக்ஸ்’ செலுத்திய ஒரு நபர், மீண்டும் வரி ஏய்ப்பு செய்தால், அவர்களை சிறைக்கு அனுப்ப, வழி வகை உண்டு. விஜய்க்கு கடைசி வாய்ப்பு, இளம் வயதிலேயே முடிந்து விட்டது. இனி, அவர், ஒருமுறை மீறினாலும், நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதாவும், வருமான வரி வழக்கில், ‘காம்பவுண்டிங் டேக்ஸ்’ செலுத்தி உள்ளார்.