உரும்பிராயில்,யுவதி செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதியதில் சமூக செயற்பாட்டாளர் பரமநாதன் உயிரிழந்தார்

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த சமூக செயற்பாட் டாளர் சிகிச்சை பலனின்றி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை யில் உயிரிழந்துள்ளார்.
பலாலி வீதி உரும்பிராயை சேர்ந்த சுப்பிரமணியம்பரமநாதன் (வயது 83) என்பவரே மேற் படி பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

திரு பரமநாதன் தனது மனைவி ஏற்கெனவே காலமான நிலையில், வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு பலாலி வீதி ஊடாக உரும்பிராயில் உள்ள அவரது வீட்டுக்கு செல்வதற்காக யாழ் ப்பாணத்திலிருந்து இடது பக்கமாக துவிச்சக்கர வண்டியில் வந் துள்ளார்.

வலது பக்கமாக உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்கு வீதியின் மத்திக்கு சென்ற போது அவரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த யுவதி ஒருவர் அவரை மோதித்தள்ளி யுள்ளார். சம்பவ இடத்தில் மயக்கமடைந்த முதியவர் உடனடியாக யாழ்.போதனா வைத் தியசாலைக்கு அனுப்பப்பட்டார். வைத்திய சாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பரமநாதன் அவர்கள் வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமார் மேற்கொண்டிருந்தார்.விபத்தில் கொல்லப்பட்ட திரு பரமநாதன் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இலங்கை உள்;ராட்சி சேவையில் உயர் நிலை அதிகாரியாக இருந்தவர் என்றும் பின்னர் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபை நிறுவப்பட்டபோது அதன் உதவிச் செயலாளராக யாழ்ப்பாணம் கச்சேரியில் பணியாற்றியவர் என்றும் பின்னர் பணியிலிருந்து இளைப்பாறியதும்,சிவில் சமூக அமைப்புக்களின் பிரதி நிதியாகவும் சமூக செயற்பாட்டாளராகவும் தொடர்ச்சியாக இருந்து பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.