உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி

மலேசியாவில் உள்ள கிளந்தான் என்ற நகரம் பொருளாதார நிலையில் பின்தங்கிய நகரம் ஆகும். இந்த நகரில் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. நூரசிலா (14) மற்றும் அயியூ (11) ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்தே இணைபிரியா தோழிகள். சிறுமிகள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்கள் தூக்கம், சுயமரியாதை, அழகான சிறுவர்களைப் பற்றி பேசுவது என எல்லாம்.

தோழிகளாக இருந்த இவர்களது வாழ்வில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. காரணம், நூரசிலா வின் தந்தையை அயியூ மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.

தந்தை சி அப்துல் கரீம் – க்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தை நூரசிலா தனது பேஸ்புக்கில், எனது உயிர்த்தோழி தற்போது எனது தாயாகியுள்ளார், எனது தந்தைக்கும் எனது தோழிக்கும் திருமணம் நடந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு அனைவரது கவனத்தையும் பெற்றதையடுத்து, சி அப்துல் கரீம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டதையடுத்து, குழந்தைகள் பாலியல் வன்புணர்வு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.