உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா

செப்டம்பர் 2ம் 3ம் திகதிகளில் ஸ்காபுறோ மற்றும் மொன்றியால் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ள உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா சென்னையிலிருந்து அமெரிக்கா பயணமாகின்றார்.
அங்கு 26ம் திகதி சிக்காகோ நகரில் பட்டிமன்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து சிறப்பிக்கின்றார்.
பின்னர் புதன்கிழமை 30ம் திகதி கனடா வருகின்றார். இங்கு அவர் அன்று மாலை பத்திரிகையாளர்கள் ஊடக நண்பர்கள் மற்றும் விழாவிற்கு ஆதரவு தரும் அனுசரைணையாளர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களோடு இராப்போசன விருந்தொன்றிலும் கலந்து கொள்கினறார். அத்துடன் தன்னோடு பட்டிமன்றங்களில் பேசவுள்ள கனடா வாழ் எழுத்தாளர்களையும் சந்திக்கின்றார். இந்த சந்திப்பும் இராப்போசன விருந்தும் ஸ்காபுறோவில் மார்க்கம்-பெயின்றட் போஸ்ட் சந்திப்புக்கு அருகில் உள்ள வின்சந்திரா உணவகத்தில் நடைபெறும். கலந்து கொள்ள விரும்புவோர் 416 732 1608 என்ற இலக்கத்தில் அழைத்து பதிவு செய்யவும். அனுமதி பெறாதவர்கள் அங்கு சமூகமளிக்க .இயலாது என்பதையும் கவனிக்கவும்
இங்கே காணப்படுவது, நேற்று மாலை பெங்களுர் நகரில் உள்ள கனடாவின்; உதவித் தூதுவராலயத்திற்கு எமது கனடா உதயன் நிறுவனத்தின் சென்னைப் பிரதிநிதி திரு பிரகாஸ் அவர்களுடன் சென்று தனக்குரிய விசாவையும் கடவுச் சீட்டையும் நேரடியாகப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தபோது எடுத்த படம் .