உண்மையை போட்டு உடைத்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை!

ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல முடியாமல் போனதற்கான காரணத்தை குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கூறியுள்ளார்.

விளையாட்டுத் துறையில் 33 வயதான மேரி கோமின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக வடகிழக்கு மலை பல்லைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதேபோல் யு.பி.எஸ்.சி.யின் முதல் பெண் தலைவரான ரோஸ் மிலியன் பாத்யூவுக்கும் (வயது- 85) பட்டம் வழங்கப்பட்டது.

இந்த பட்டமளிப்பு விழாவில் மேரி கோம் பேசுகையில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 2 பதக்கங்கள் மட்டுமே வாங்க முடிந்ததற்கு விளையாட்டுத் துறையில் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கு எனக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், ஆண் பாக்சர்கள் 5 முதல் 6 வாய்ப்புகள் வரை பெற்றனர்.

ஆனாலும் அவர்களில் பலர் தகுதி பெறவில்லை. குத்துச்சண்டை கூட்டமைப்பு தேர்தலுக்குப் பிறகு அந்த விஷயங்கள் மாற்றப்படும் என நம்புகிறேன்.

நான் மட்டும் ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்தால் நிச்சியமாக பதக்கத்துடன் நாடு திரும்பி இருப்பேன் என கூறியுள்ளார்.