- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

ஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
இரண்டு மாதங்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு ஒரே நாளில் 2,979 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இரண்டாம் கட்ட அலைவீசக் கூடும் என ஈரான் சுகாதார அமைச்சர் சயீத் நமாகி அச்சம் தெரிவித்துள்ளார். இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 2,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மக்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் கடுமையான சூழல்களை சந்திக்க வேண்டியது வரும் என்று நாட்டு மக்களை அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானில் இதுவரை 1,54,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,21,004 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை அந்நாட்டில் 7,878 பேர் பலியாகி உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.