- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

ஈரானில் உடை கட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்டமாக முக்காடை நீக்கிய 29 பெண்கள் கைது
ஈரானில் 1979-ல் நடந்த இஸ்லாமிய புரட்சியில் இருந்து வலுக்கட்டாயமாக்கப்பட்ட பெண்களுக்கான உடை கட்டுப்பாட்டிற்கு எதிராக போராடும் விதமாக தலை முக்காடை நீக்கி தெருக்களில் நடந்த பெண்கள் 29 பேரை தெக்ரான் போலீசார் கைது செய்து உள்ளனர் என ஈரான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. பொது உத்தரவிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடத்தவர்கள் என்று அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என செய்தி வெளியிட்டு உள்ள ஈரானிய மீடியாக்கள் இதுதொடர்பாக விரிவான தகவல்களை தெரிவிக்கவில்லை
ஈரானில் மிகவும் பிசியாக இருக்கும் தெருவில் பெண் ஒருவர் தலையில் முக்காடு அணியாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது.
இப்போது பெண்கள் போராட்டம் நடத்தும் விதமாக முக்காடை நீக்கி தெருவில் நடந்த விவகாரம் தலைமை வக்கீல் முகமது ஜாபர் மொன்தாஜாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. புதன்கிழமை தொடங்கிய இந்த போராட்டத்திற்கு அதித முக்கியத்துவம் கொடுக்காத அவர் இது “அற்பமானது” மற்றும் “குழந்தைத்தனமான நகர்வுகளாகும்” வெளிநாட்டினரால் தூண்டப்படுகின்றனர் என கூறிஉள்ளார். இப்போது பெண்கள் முக்காடு அணியாமல் தெருவில் நடப்பது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
முக்கிய மனித உரிமை வழக்கறிஞர் கடந்த செவ்வாய் அன்று ஏஎப்பி செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசிய போது, “இவ்விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஜாமீன் வழங்க 100,000 டாலர் பிணைத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டது,”என கூறிஉள்ளார். “முக்காடு அணிவதை உண்மையில் நான் நேசிக்கிறேன், ஆனால் கட்டாயப்படுத்துவேன் எதிர்க்கிறேன்,” என்பதே பெண்களில் கோஷமாக உள்ளது. போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.