- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

இஸ்தான்புல் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி அதிரடி கைது
துருக்கியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதுநடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் தொடர்பாகமுக்கிய குற்றவாளி கைதாகியுள்ள தகவல்வெளியாகியுள்ளது.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் டிசம்பர் 31ஆம்திகதி இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதுதீவிரவாதிகள் இருவர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 39 பேர் பலியானார்கள்.
இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அந்நாட்டுக் காவல்துறையினர், வெளிநாட்டவர்கள் உட்பட பலரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது, இத்தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவர்கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல்தெரிவித்துள்ளது.
அப்துல்காதிர் மஷாரிபோவ் என்ற அந்த தீவிரவாதி உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்என்றும் இஸ்தான்புல் நகரின் சென்யுர்ட் எனும் இடத்தில் கைதுசெய்யப்பட்டதாகவும்அந்நாட்டுக் காவல்துறை தகவல் அளித்துள்ளது.