இளவரசர் ஹாரி – மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளதாக கென்னிங்ஸ்டன் அரண்மனை அறிவித்துள்ளது.
விளம்பரம்

இசை, பூக்கள், வரவேற்பறை உள்ளிட்ட அனைத்து சேவைகளின் செலவுகளையும் அரச குடும்பம் ஏற்கிறது. திருமண தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் .இங்கிலாந்து திருச்சபையில் செல்வி மார்கெலுக்கு திருமணத்துக்கு முன்பு ஞானஸ்நானம் செய்யப்படுகிறது.

திருமணத்தின் அனைத்து அம்சங்களுக்குமான செயல்முறை குறித்து முப்பத்து மூன்று வயதான இளவரசர் ஹேரியும், செல்வி மார்கெலும் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாகவும். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொது மக்கள் உணரத் தேவையான திட்டங்கள் குறித்து தீவிரமாக வேலை செய்து வருவதாகவும் இளவரசர் ஹேரியின் செய்திதொடர்பாளர் ஜேசன் நாஃப் தெரிவித்துள்ளார்.

இந்த திருமணமானது மற்ற எல்லா திருமணங்களைப் போலவே மணப்பெண் மற்றும் மணமகனின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் விதமாக கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை கொண்டதாக இருக்கும் என ஜேசன் கூறியுள்ளார்.

வின்ட்ஸர் கோட்டை திருமணம் செய்துகொள்ளப் போகும் இருவருக்கும் மிகவும் விசேஷமான இடம். ஏனெனில், அங்கேதான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருவரும் சந்தித்ததில் இருந்து நேரத்தை செலவிட்டுள்ளனர் என ஜேசன் நாஃப் விவரித்துள்ளார்.

அமெரிக்க நடிகையான மெகன் இங்கிலாந்து குடிமகனாக விருப்பம் கொண்டுள்ளதாகவும் வரும் வருடங்களில் அதற்கான வேலைகளில் ஈடுபடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு வின்ட்ஸரில் ஹேரியின் தந்தையான இளவரசர் சார்லஸ், கார்ன்வால் பார்க்கர் பவுல்ஸை திருமணம் செய்தபிறகு செயின்ட் ஜார்ஜ் சேப்பல் பிரார்த்தனை மற்றும் அர்ப்பணிப்புக்கான இடமாக இருந்தது.
அரியணை ஏறுவதற்கான வரிசையில் ஐந்தாவது ஆளாக நிற்கும் ஹேரி, செல்வி மார்கெலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கடந்த திங்களன்று அறிவித்தார். திருமண அறிவிப்பை வெளியிட்ட நாளானது இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருந்ததாகவும், இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் அவர்களுக்கு மகத்தான ஆதரவு இருந்ததாகவும் ஜேசன் கூறியுள்ளார்.