- மன்னித்து விடுங்கள் என்று ரணில் கூறியதன் அர்த்தம் என்ன?
- இந்தியா எடுக்கும் அனைத்தும் நடவடிக்கைகளுக்கும் மிகச் சிறந்த நட்பு நாடு என்ற அடிப்படையில் இஸ்ரேல் ஆதரவு அளிக்கும்
- நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு
- பேருந்தில் பணிக்கு செல்லும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்
- கழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: ஹைஜேக் செய்யப்பட்ட கூகுள் தேடல்

இலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்
இலங்கையில் உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கலாம். ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்க்களமாகவே இருக்கிறது.
அவர்களுடைய வாழ்வுக்கான, அன்றாட தேவைக்கான, வாழ்வாதாரத்துக்கான, உணவுக்கான, கௌரவமான வாழ்வுக்கான போராட்டமும், அவப்பெயருக்கு பயப்படும் போராட்டமும்,சமூகப் பாதுக்காப்புக்கான போரட்டமும் எத்தனை தலைமுறைகளுக்குத் தொடரப்போகின்றதோ என்று நினைக்கும்போது மனதில் ஒரு வகை பயம் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.
வடக்கு – கிழக்கில் 89,000 பெண்கள் துணைவர்களை இழந்திருக்கிறார்கள். கிழக்கில் 26,000 பெண்களின் துணைவர்கள் மரணித்து விட்டார்கள் (2010இல் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லவினால் சமர்பிக்கபட்ட தொகை ) இது தவிர வடக்கில் மட்டும் தங்கள் குடும்பத்துக்கு வருவாயைப் பெற்றுக் கொடுத்த 20,000 ஆண்கள் தற்போது அவர்கள் குடும்பத்துடன் இல்லை. (இந்த ஆண்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம், கடத்தப்பட்டு இருக்கலாம் , சிறைக்கைதியாக இருக்கலாம் அல்லது இறுதி யுத்தத்தில் அல்லது அதற்கு முன் கொல்லபட்டவர்களாகவும் இருக்கலாம் ).
இலங்கை பெண்களுக்கு இட ஒதுக்கீடு – அதிகாரம் தருமா அரசியல் கட்சிகள்?
இலங்கையில் போர் முடிந்து 8 ஆண்டுகள்: அறுவடை செய்யப்பட்டதா அமைதி?
இதுதவிர வட மாகாணத்தில் மட்டும் 80% குடும்பங்களில் ஆண்கள் இல்லை என 2013க்கான சனத்தொகை மதிப்பீடு சொல்கிறது . இந்த 80%-இல் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்கள், ஒன்று துணைவனை இழந்தவராக இருக்கலாம், திருமணம் செய்து கொள்ளாத முன்னாள் போராளியாக அல்லது சாதாரணப் பெண்ணாக (Civilian Women) இருக்கலாம்.
அப்பெண்கள் விவாகரத்து பெற்றவர்களாக அல்லது மேற்குறிப்பிட்ட காணாமல் ஆக்கப்படவரின் அல்லது கடத்தப்பட்டவரின் அல்லது கொலை செய்யப்பட்டவரின், அல்லது சிறையில் உள்ளவரின் தாயாக, துணைவியாக, தங்கையாக, அல்லது மகளாக இருக்கலாம்.
பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த எண்ணிக்கையானது மிகவும் துயரம் தரும் வாழ்வியலை எடுத்தியம்புகிறது. வேலை புருஷ லட்சனம் என்று சொல்லிக்கொண்டு ஒரு குடும்பத்துக்குத் தேவையான வருவாயைப் பெற்றுத்தரும் பொறுப்பை ஆண் மகனின் தலையில் சுமத்தி, அந்தக் குடும்பத்துக்கான தீர்மானம் எடுக்கும் பொறுப்பை அந்த வீட்டில் இருக்கும் ஆணின் தலையில் சுமத்தும் சமூகத்தில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
அதற்கே சமூகமும் பழகி விட்டது. இவ்வளவு நடந்த பின்னும் இந்த கருத்தியலில் இருந்து சமூகம் மாறவில்லை என்பது சாபக்கேடு.
பிரதானமாக வருவாயை குடும்பத்துக்கு கொண்டு வந்து அந்த குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்த ஆண் இல்லாதவிடத்து அந்த குடும்பங்கள் படும் பாடு சொல்லில் அடங்காதவை.
சமத்துவத்திற்காக ஆடைகளைக் களையும் பெண் நாடகக் கலைஞர்
இந்தியா – பாகிஸ்தான் போரின் 22 நாட்கள்; 52 ஆண்டுகளுக்குப் பிறகு!
குடும்பத்தையும் பிள்ளைகளையும் பார்த்துகொண்டு வருவாயைத் தேட வேண்டிய முழுப்பொறுப்பும் பெண்களிடம் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது . இவர்கள் வீட்டை அண்மிய பகுதிகளில்தான் வேலை செய்ய விரும்புவார்கள்.
காரணம் வீட்டையும் வீட்டில் இருக்கும் இளம் பிள்ளைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் கண்காணிக்கவும் பராமரிக்கவும் வேண்டும். சரியான பாதுகாப்பில்லாத வீட்டிலும் இவர்கள் இன்னும் வாழ்கின்றனர்.
அதே போல் வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்வதானால் போக்குவரத்துச் செலவு அதிகமாகும். இன்னும் போக்குவரத்து வசதிகளும் சரியான முறையில் நடை பெறுவதும் இல்லை.
உள்கட்டமைப்பு வசதிகள் செய்து வீதிகள் அபிவிருத்தி செய்யபட்டாததால் வெளிமாவட்டத்து வியாபாரிகளும் லீசிங் கம்பெனி காரர்களும் சிறுதொகை கடன் கொடுப்பவர்களும் நாளுக்கு நாள் சகல வீடுகளுக்கும் செல்வது வீட்டில் தனியே இருக்கும் பெண்பிள்ளைகளின் அல்லது முன் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. இதையெல்லாம் கருத்தில்கொள்ளும் எந்தப் பெண்ணும் தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு வேலைக்குப் போவதை விரும்புவதில்லை
இதில் தன் பிள்ளைகளையெல்லாம் இழந்த அல்லது மத்திய கிழக்குக்கு சென்றவர்களின் பேரப்பிள்ளைகளை பராமரிக்கும் வயது முதிர்ந்த பாட்டிமாரின் பாடு அந்தோ பரிதாபம். இவர்கள் மூன்று நான்கு பேரப்பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டும். அதே நேரம் வருவாயையும் தேடிக்கொள்ள வேண்டும்.
இது மாத்திராமா? இதே பெண்கள்தான் காணியை விடுவிக்கச் சொல்லியும் காணாமல் ஆக்கபட்டவர்களை தேடியும் இன்னும் அலைகின்றனர், போராடுகின்றனர் .
இவை எல்லாவற்றையும்விட அதிக சவால்களுக்கு முகம் கொடுப்பவர்கள் முன்னாள் போராளி பெண்கள். அதிலும் தனது உடல் பாகத்தை இழந்த பெண் போராளிகள் படும் துன்பம் பன்மடங்கு. முதலாவது காரணம் அவளின் சமூகமே அவளை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலைமை காணப்படுகின்றது.
அவர்களை மணம் முடிக்க எந்த ஆண்மகனும் இலகுவில் முன் வராமை காணப்படுகிறது. காரணம் ‘இவள் குடும்பத்துக்கு சரி வரமாட்டாள், வன்முறையில் ஊறிய பெண்’ என்ற பார்வை. சரியான தொழில் இல்லாத அதுவும் கை கால் இல்லாத பெண்ணை மணம் முடிக்க பெரிய அளவில் யாரும் முன்வரமாட்டார்கள். “சாதாரண பெண்களுக்கே திருமணம் செய்வது கடினம்.”
“அவர்களுக்குத் திருமணம் ஆக சீதனம், வீடு, வாசல் ஆகியவை தேவை. இந்த அழகில் என்னைப் போல் வீடு வாசல் இல்லாத தொழில் தெரியாத, ஊனமுற்ற பெண்ணை யார் திருமணம் செய்வார்,” என்பதே அவர்களின் நிலை.
சிலர் வீடு திரும்பும்போது தாய் தகப்பன் இருந்த சொத்துபத்தை எஞ்சி இருந்த பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டார்கள். ஆகவே இவர்களுக்கு காணிகூட இல்லாத நிலையும் காணப்படுகிறது.
தொழில் வாய்ப்பு தேடிப்போனாலும் இலகுவில் இவர்களை எல்லாரும் வேலைக்கு அமர்த்த முன் வராத நிலையும் காணப்படுகிறது . அப்படி வேலைகள் கிடைத்தாலும் உடல் நிலை இயலாமை காரணமாக அவர்களுக்கு வேலை செய்யவும் முடிவதில்லை.
இன்னும் தன் உடல் பாகத்தில் செல் துண்டுகளை சுமப்பவர்களாகவே இவர்கள் வாழ்கின்றார்கள். பலருக்கு மருத்துவ வசதி தேவைபடுகிறது.
பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்