இலங்கை பார்லிமென்ட் கலைப்பு !!

இலங்கை பார்லிமென்டை கலைப்பதற்கான அரசாணையில் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே கையெழுத்திட்டார்.  இலங்கைக்கு கடந்த 2015ம் வருடம் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. 2015ம் வருடம் செப். 1ல் பார்லிமென்ட் பதவிக்கு வந்தது. ராஜபக்சே முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் அந்நாட்டின் பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பார்லிமென்டை கலைப்பதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார். கையெழுத்திடப்பட்ட அரசாணை இலங்கை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்லியின் பதவிக்காலம் 6 மாதம் இருக்கும் நிலையில் அந்நாட்டில் பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பார்லிமென்ட் தேர்தல் ஏப். 25ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்லி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 12 முதல் மார்ச் 19 வரை நடக்க உள்ளது.