இலங்கை தூதரகத்தில் காந்தி சிலைக்கு ராஜபக்சே மரியாதை !!

இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்த நாளையொட்டி உலகமெங்கும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் வந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, அங்குள்ள காந்தி மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் இலங்கை அரசு உயரதிகாரிகளும் வந்திருந்தனர்.