இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்பு

இலங்கை தாக்குதலுக்கு முன்னர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பானது தங்களிடம் உள்ள க்ரிப்டோ கரன்சிகளை டாலர்களாக மாற்றியதாக கண்டறிந்துள்ளது. இஸ்ரேல் நிறுவனமான ஒஉஇட்ஸ்டீர்ம் இதுகுறித்து தெரிவிக்கையில், பிட்காயின் முறையில் இருக்கும் நம்பகத்தன்மை மற்றும் மேற்பார்வை செய்யப்படாத சர்வதேச பண மாற்றங்கள் அனைத்தும் தீவிரவாதத்திற்கு பயனளிப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது.
இலங்கையில் நூற்றுக்கணக்கானவர்களின் உயிரைப் பறித்த அந்த தொடர் தாக்குதல்களுக்கு முன்னர் ஐ.எஸ். அமைப்பு பிட்காயின் பரிமாற்றங்கள் செய்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி காயின் பேமெண்ட்ஸ் (CoinPayments) என்ற தளத்தின் நிலுவையில் உள்ள தொகை £383,000 இருந்து £3.45 மில்லியன் என அதிகரித்ததாக அந்த இஸ்ரேல் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
ஆனால் ஈஸ்டர் ஞாயிறன்று அந்த மொத்த பணமும் மாயமாகி, பழைய நிலைக்கே திரும்பியுள்ளது. மட்டுமின்றி கடந்த இரு ஆண்டுகளாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பானது தமது ஆதரவாளர்கள் மூலம் பிட்காயின் நன்கொடைகளை ஊக்குவித்து வந்துள்ளது. இந்த தொகையில் விளம்பரம் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளை அந்த அமைப்பு உருவாக்கி வந்துள்ளது.
ஐ.எஸ். மட்டுமின்றி உலகின் முக்கிய பல தீவிரவாத அமைப்புகளும்  தற்போது பிட்காயின் நன்கொடைகளை பயன்படுத்தி வருவதாக அந்த இஸ்ரேல் புலனாய்வு அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
இலங்கையில்  தற்கொலை படை தாக்குதல் நடத்துவதற்கு முன் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பெருந்தொகைப்பணம்  நன்கொடையாக கிடைத்ததாக இஸ்ரேலின் உளவு அமைப்பு  தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் சர்வதேச எல்லையோர மேற்கு கரீபியன் தீவான கைமேன் தீவு மற்றும் கனடாவுக்கு வெளியே இயங்கிவரும் ‘கொய்ன்பேமென்ட்ஸ்’ நிறுவனத்தின் ஊடாகவே இந்த நன்கொடை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புலனாய்வுத் தகவல்களின்படி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முதல்நாள், ‘கொய்ன்பேமென்ட்ஸின்’ நிதிக்கையிருப்பு, 5 லட்சம் டாலரில் இருந்து 45 லட்சம்  டாலராக உயர்ந்திருந்தது. எனினும், இலங்கையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட அடுத்த நாள் அந்த தொகை மீண்டும் 5 லட்சம் டாலராக குறைந்துள்ளதாக இஸ்ரேலின் உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது. இந்த தகவல்களை இஸ்ரேலின் செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.