இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டதன் எதிரொலி கோலாலம்பூர் விமான நிலைய பாதுகாப்பு அதிகரிப்பு

கோலாலம்பூர் விமான நிலையத்தின் பாதுகாப்பு நடைமுறைகளை மீளமைக்கவுள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் உயர்ஸ்தானிகர், இப்ராஹிம் சஹீப் அன்சார் அண்மையில் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் பொலிஸ் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் டெடுக் சேரி ஸூல்கிபிலி அப்துல்லா இது தொடர்பில் கருத்துரைக்கும்போது விமான நிலையத்தின் பாதுகாப்பு பணிகள் மீளமைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தேவையேற்படுமாயின் பாதுகாப்பு பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.