இலங்கை அரசியலில் வெளிச்சத்திற்கு வரும் பல உண்மைகளால் மக்கள் தெளிவு பெறுவார்களா? அன்றி தொடர்ந்தும் ஏமாற்றப்படுவார்களா?

உண்ணாவிரம் இருந்து தன்னை அழித்துக்கொண்ட தியாகி திலீபன் அவர்களின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்படுகின்ற இந்த வாரத்தில் அவர் வெறுமனே பசித்திருக்கும் போராட்டத்தை நடத்தவில்லை, மரணத்தை அணைத்துக்கொள்ளும் நாளுக்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாக அவர் ஒரு செயற்கை நோயாளியாக இருந்து செத்து மடிந்திருக்கின்றார். இயற்கையாய் வரும் நோய்களைத் தாங்குவதே கொடுமை. அவ்வாறு இருக்கும் போது செயற்கையாக பசிஇருத்தலைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் போது உடலின் அனைத்து உறுப்புக்களும் இயல்பை இழந்து தவித்திருக்கும். அப்போது அந்த தியாகி அடைந்து உடல் வேதனை எவ்வாறு இருந்திருக்கும் என்று நாம் தற்போது எண்ணிப் பார்க்கின்றோம்..
அதற்கு காரணங்கள் பல உண்டு. தியாகி திலீபனுக்கு பின்னர் எத்தனையோ ஆயிரக்கணக்கான போராளிகள் தங்களை அழித்துக்கொண்டே போராடிஇருக்கின்றார்கள். தொடர்ந்து மடிந்திருக்கின்றார். பின்னர் 2009ம் ஆண்டு கொடிய யுத்தத்தில் எத்தனை கொடிதான மரணங்கள். இன அழிப்புக்கள் பாலியல் கொடுமைகள், துரோகத்தனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இவ்வறான நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உடுவில் பாராளுமன்ற உறுப்பினர் திரு தர்மலிங்கத்தின் புதல்வரும், முன்னாள் புளட் இயக்கப போராளியுமான திரு சித்தார்த்தன் கூறிய கருத்துக்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த அவர்களது தலைவர்கள் சர்வதேசத்தினதும் அரசாங்கத்தினதும் வேண்டுகோளை நிறைவேற்றும் தலைவர்களாகவே உள்ளார். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அவர்களுக்கு “என்னவெல்லாம்” கிடைத்திருக்கும் என்று தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு.
திரு சித்தார்த்தன் வெளிப்படையாகக் கூறியது இதுதான்:-
சர்வதேசமானது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் சாதாரண எம்பிககளுக்கும் விடுததுள்ள வேண்டுகோளில் “மைத்திரிபால சிறிசேனாவின் அரசாங்கத்ததை கவிழ்த்து விடும்படியான எந்த நடவடிக்கையை எடுக்க வேண்டாம்” என்று வற்புறுத்தி வருவதாக பகிரங்கமாக சித்தார்த்தன் கூறியுள்ளார்.
அண்மையில் புலம்பெயர்நாடுகளிலிருந்து சில அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொழும்புக்கு அழைத்தபோதும் அவர்களைச் சந்தித்த அமைச்சர்களும் அவர்களுக்கு இதைத்தான் கூறியிருப்பார்கள்.
இவ்வாறன பல உண்மைகள் வெளிசசத்திற்கு வருகின்றன. இவற்றை மக்கள் நன்கு தெரிந்து கொண்டும் தெளிந்து கொண்டும் தமிழர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை இவ்வார கதிரோட்டத்தின் மூலம் ஒரு வேண்டுகோளாக பதிவு செய்கின்றோம்.