- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்கிறது ஐரோப்பிய யூனியன் குழு
இலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் ஆளும் கட்சியின் தலைவர் சஜித் பிரமதேசாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
இலங்கை அதிபர் தேர்தலில் மொத்தம் 35 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். 15 மில்லியன் வாக்களர்கள், வாக்களித்து தங்கள் நாட்டு அதிபரை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய யூனியன் குழுவினர் கடந்த 11 ஆம் தேதி அந்நாட்டுக்கு சென்றுள்ளனர். ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தின் உறுப்பினரான போர்சுகலைச்சேர்ந்த மரிசா மதியாஸ் இக்கண்காணிப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தேர்தலை 6–வது முறையாக ஐரோப்பிய யூனியன் குழு கண்காணிக்கிறது. ‘‘இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் பெருமைக்குரியது’’ என்று தலைமை மேற்பார்வையாளர் மாரிசா மதியாஸ் கூறினார்.