இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்

இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 26-ந் திகதி தொடங்குகிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்ஜெய இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக விளையாடாமல் இருந்த தலைவர் மெத்யூஸ், விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான தினேஷ் சந்திமால் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

சிம்பாப்வே தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய உபுல் தரங்கவிற்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்னவிற்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோல் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவும் அணியில் இடம்பெறவில்லை.

தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மெத்யூஸ் (தலைவர்), 2. தினேஷ் சந்திமால், 3. குசால் மெண்டிஸ், 4. குசால் பெரேரா, 5. திமுத் குணரத்ன, 6. கௌசல் சில்வா, 7. தனஞ்ஜெய டி சில்லா, 8. உபுல் தரங்க, 9. லஹிரு குமாரா, 10. விகும் சஞ்ஜெய, 11 நுவன் பிரதீப், 12. துஷ்மந்தா சமீரா, 13. சுரங்கா லக்மல், 14. தில்ருவான் பெரேரா, 15. ரங்கன ஹெராத்.