இலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை அடுத்து, முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்படுவுதாக அந்நாட்டு அதிபர் சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முகத்தை மறைக்கும் ஆடைகள் அல்லது அடையாளங்களை மக்கள் அணிய தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இந்த தடை ஏப்.,29 முதல் அமலுக்கு வருகிறது. அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழ் இந்த தடை கொண்டு வரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்னும் பதற்றம் அடங்காத நிலையே காணப்படுகிறது. மக்கள் வெடிகுண்டு அச்சத்தில் உறைந்துள்ளனர். ராணுவம் தொடர்ந்து நாடு முழுவதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் விளைவாக வயல்வெளி பகுதிகளில் இருந்து வெடி பொருட்களும், மறைவான இடங்களில் இருந்து ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.