இலங்கையில் ஏற்பட்ட அடை மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட 230 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை, மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஆகியவற்றால் 45 பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 230 பொதுமக்கள் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் நாட்டில் அனைத்து இடங்களையும் சேர்ந்த மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேற்படி வெள்ள அனர்த்தம் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களிலும் 8000 வீடுகள் அழிந்து போயுள்ளதாகவும் 6இலட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளானதாகவும், சுமார் 85000 பேர் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு;;ள்;ளது. வெள்ளப்பெருக்காலும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களாலும் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக மரணங்களும் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாகவும் ஏனைய பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் காலி, மாத்தறை, மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் ஏற்பட்ட பாரிய அழிவுகள் மற்றும் பாதிப்புக்கள் ஆகியவற்றால் ஏழை மக்கள் அதிகம் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகி;ன்றது.
எனினும் தற்போது வெள்ளம் வடிந்த நிலையிலும் மழை பெய்வது குறைந்த நிலையிலும் மக்கள் சற்று ஆறுதல்; அடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் இராணுவம் மற்றும் ஆகியன காணமற்போனவர்களை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், கூறப்படுகின்றது.
இதே வேளை கடந்த சில நாட்களாக அடை மழை தொடர்ந்து பெய்ததால் குறிப்பிட்ட பதினைந்து மாவட்டங்கள் பாதிக்கப்பட்டாலும் தலைநகர் கொழும்பு அடங்கும் பிரதேசங்களில் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும். கூறபடுகின்றது. இது இவ்வாறிருக்க, நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக பல நாடுகள் உடனடி உதவிகளை வழங்கியுள்ளதாக அறியப்படுகின்றது. குறிப்பாக சீனா, இஸ்ரேல், சிங்கப்பூர், அவுஸ்;த்திரேலியா பாகிஸ்த்தான், இந்தியா ஆகிய நாடுகளின் உதவிகள் பெருமளவில் கிட்டியுள்ளதாகவும், அவற்றுள் பாகிஸ்தானின் கடற்படைக் கப்பல் உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்திருந்தாலும், கப்பல் உள்ள உலங்கு வானூர்திகள் மூலமும் நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும், சில வேளைகளில் பாரமான உபகரணங்களை கொழும்பிலிருந்து பாதிக்கப்படட பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களின் துயர் துடைக்க வடக்கு மாகாண மக்கள் இன மத மற்றும் மொழி வேறுபாடு இன்றி தங்கள் உதவிகளை வழங்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று முன்தினம் யாழப்ப்hணத்தில் தனது ஆளுனர் அலுவலகத்தி;ல் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என்பது குறிப்பிட்டார்.

(கொழும்பிலிருந்து எமது செய்தியாளர்)