இலங்கையின் வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள்; தங்கள் கட்சிகளின் போக்குகளுக்குஅப்பால் சென்று“போராளிகளாகத்”திகழ்கின்றனர்

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள், இந்தியஅரசின் ஆலோசனையின் படிமுன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனாவின் ஆட்சியில் இணைக்கப்பட்டு ஒரே மாகாண சபை  நிறுவப்பட்டது. ஆனால் அந்த நிர்வாகம் வெற்றியளிக்காத ஒன்றாகவே நகர்ந்து சென்று, பின்னர் மகிந்த ராஜபக்சாவின் ஆட்சிக் காலத்தில் வடக்குமாகாண சபை என்ற இணைப்பு நீக்கப்பட்டு. தனித்தனியான மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டன.

மேற்படி தனியான வடக்கு மாகாண சபை, கிழக்கு மாகாண சபை ஆகியவற்றில் முதல் தேர்தலைச் சந்தித்தது கிழக்கு மாகாணசபையே. மேற்படித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அதிக ஆசனங்களையும் இரண்டாவது எண்ணிகையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பெற்றன. மேற்படி கிழக்கு மாகாணசபையின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்னுலாப்தீன் அஹமட் ஒரு  செயற்திறன் மிக்க நிர்வாகியாக தன்னை அடையாளம் காட்;டிக்கொண்டு வருகின்றார். அதற்கு மேலாக அவர் சார்ந்த கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ஹக்கீமின் செயற்பாடுகள் மற்றும் கருத்துக் கூறல் ஆகியவற்றிலிருந்து சற்று வேறுபட்டவராகவும் பொதுவாகவே மக்கள் நலன் பற்றிய கருத்துக்களை  எப்போது முன்வைக்கின்றவராகவும் காணப்படுகின்றார்.

அவர் நேற்று முன்தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றுகையில் “இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடைய புதிய அரசமைப்புத் திருத்தத்தின் ஒவ்வொரு நகர்வு குறித்தும் சிறுபான்மை சமூகங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் புதிய எல்லை நிர்ணய முறைமை தொடர்பில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும். இதனூடாக இரு சமூகங்களிடையே இலகுவாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைப் பெருப்பித்து எவரும் பிரித்தாளுவதற்கு சந்தர்ப்பத்தை நாம் ஒருபோதும் வழங்கக் கூடாது. இரு சிறுபான்மை சமூகங்களுக்கும் அநீதி இழைக்கப்படாத வகையிலான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு இரு தரப்புக்களுக்கும் வெளிப்படைத் தன்மையுடன் பரஸ்பர முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.

யுத்தம் மற்றும் பல்வேறுஅரசியல் நெருக்கடியான கால கட்டங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பல இழப்புக்களை சந்தித்துள்ளதால் இனிமேலும் அவர்களுக்கு இழப்புக்கள் ஏற்படாவண்ணம் அதற்கேற்ற பொறிமுறையொன்றை இரு சமூகங்களும் வேண்டி நிற்கின்றன. பேரினவாத சிந்தனைகளும் பெரும்பான்மை அடக்குமுறை கலாசாரமும் புரையோடிப் போயுள்ள இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்துக்கான நியாயமான அரசியல் தீர்வு என்பது சூட்சுமம் மிக்க இராஜ தந்திரமான மற்றும் சாணக்கியமான நகர்வுகள் மூலமே சாத்தியப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்துக்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் என்று நாம் நம்பலாம்.
இந்த வேளையில் எமது வடக்கு மாகாண முதலமைச்சர் மதிப்பிற்குரிய சி. வி. விக்னேஸ்வரன் அவர்களும் தான் சார்ந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை கொண்டுள்ள அரசியல் கருத்துக்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மைத்திரி அரசாங்கத்தோடு கொண்டுள்ள சினேகபூர்வமான உறவு ஆகியவற்றைக்  கடந்து தனது கருத்துக்களை தெளிவாகக் கூறி வருகின்றார். பல இடங்களில் மிகவும் துணிச்சலாக மைத்திரி அரசாங்கத்தோடும், தமது கட்சித் தலைமையோடு எதிர்வாதம் புரியும் புனிதத் தன்மை கொண்டவராக உள்ளார்.

இந்த இடத்தில் இந்த இரண்டு முதலமைச்சர்களுமே வடக்கு கிழக்கு மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று கூறினாலும், அது மிகையாகாது. வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் செய்னுலாப்தீன் அஹமட்  அவர்களும் தமிழ்த் தேசியம் என்ற என்ற அடையாளத்தை நிலை நாட்டுவதற்கு அரசியல் தளத்தில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மார்க்கம்-தோர்ண்ஹில் பாராளுமன்றத் தொகுதிக்கான கன்சர்வேர்ட்டிவ் கட்சி வேட்பாளராக ராகவன் பரம்சோதி தேர்ந்தெடுக்கப்பட்டார்

 

மார்க்கம் – தோர்ண்ஹில் மத்தியபாராளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின்சார்பாக போட்டியிடும் வேட்பாளாராக ராகவன் பரம்சோதி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு வேட்பாளர்களுக்கான நியமனத் தேர்தல் மார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதியிலுள்ள மிலிக்கன் மில்ஸ் சனசமூக நிலையத்தில் இரவு 7:30 மணிக்கு ஆரம்பமாகி சுமூகமாக நடைபெற்றது. இந்த உள்ளகத் தேர்தலின் போது, சகல வேட்பாளர்களும் தமது தேர்தல் பணிகளை ஒழுங்காகவும் கண்ணியமாகவும் மேற்கொண்டு வாக்காளர்களுக்கோ அதிகாரிகளுக்கோ சிரமங்கள் கொடுக்காது தேர்தல் நிறைவு பெற உதவி புரிந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்கலம் சமீபத்தில் பதவி விலகியதைத் தொடர்ந்து இத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 3 ம் திகதி நடைபெறுமெனஅறிவிக்கப்பட்டது. காலஅவகாசம் போதாமலிருந்தும் வேட்பாளர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு தம்மை இத் தேர்தலுக்குத் தயார்ப்படுத்தி யிருந்தனர். இடைத்தேர்தல் நடைபெறும் தினமான ஏப்ரல் 3ம் திகதிக்கு முன்னர் பிரச்சாரப் பணிகளை முழுமையாக மேற்கொள்ளுவது என்பது மிகவும் சிரமமான காரியம் என்பதால் வேட்பாளர்  ராகவன் அவர்களுக்கு பல்வேறு வழிகளிலும் ஆதரவை வழங்க தமிழ்  மக்கள்  அனைவரும் முன்வர வேண்டும் என்று பிரச்சாரக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.