- காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்
- நடிகர் விவேக் உடல்நிலை மோசம்: தொடர்ந்து எக்மோ சிகிச்சை
- அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி
- நீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்
- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!

இலங்கைத் தமிழர் பிரச்சினையின்போது திமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யாதது ஏன்? – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
இலங்கை தமிழர் பிரச்சினையின் போது திமுக எம்.பி.க்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று மீன்வளத் துறை அமைச் சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக வலியுறுத்த முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கடிதம் எழுதப்பட்டது. முதலில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசுங் கள் என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது.
இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் அழைத்துப் பேசினார். அங்கே உள்ளே ஒன்றை பேசிவிட்டு, வெளியே வந்து வேறுவிதமாகப் பேசுவது அரசியல் நாகரிகம் அல்ல. முதல்வர் தலைமை யில் அனைத்துக்கட்சித் தலைவர்களை பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டார் என்று ஸ்டாலின் சொன்னதை ஏற்கெனவே மறுத்துவிட்டோம். பிரதமரோ, பிரதமர் அலுவலகமோ அதுபோல கூறவில்லை. முதல்வருடன் நடந்த ஆலோசனையின்போது, சட்டப்பேரவையைக் கூட்டி அனைவரும் ஒருமித்து கருத்து தெரிவிப்பது என்று முடிவெடுத்தோம்.
இந்நிலையில், திருமண விழா ஒன்றில் ஸ்டாலின் பேசும்போது, காவிரி பிரச்சினையில் முதல்வரை பிரதமர் சந்திக்க மறுப்பதால், எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார். காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது அதிமுகதான்.
திமுகவுக்கு நாடாளுமன்றத் தில் ஒரு எம்.பி.கூட கிடையாது. அதனால், எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் சுலபமாக கூறலாம். மத் திய அரசில் 17 ஆண்டுகளாக இருந்த திமுக, காவிரி நதிநீர் பிரச்சினையில் என்ன செய்தது?
இலங்கையில் ஒன்றரை லட் சம் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டபோது உங்கள்எம்.பி.க்கள் ராஜினாமா செய்திருந்தால் காங்கிரஸ் அரசு காலியாகியிருக்கும். ஆனால், நீங்கள் யாரும் ராஜினாமா செய்யவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம், முறைப்படுத்தும் குழு அமைக்க மத்திய அரசுக்கு உரிய வழியில் அழுத்தம் கொடுத்து, நமது மாநில உரிமையைக் காப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதற்கான அழுத்தத்தை எங்கள் எம்.பி.க்கள் நிச்சயம் கொடுப் பார்கள். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.