இலங்கைக்கான கனேடிய தூதுவர், நாமல் ராஜபக்சா ஆகியோர்க்கிடையில் டுவிட்டரில் மோதல்

இந்த கட்சிகள் தங்கள் மக்கள் மற்றும் சமூகத்தவர்களை சந்திப்பது குறித்து அதிக அக்கறை செலுத்தினால், தேர்தலிற்கான மக்களின் எதிர்பார்ப்பினை செவிமடுத்தால் இலங்கை நன்மையடையும்” என நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
நாமலின் இந்த கருத்துக்கு பதிலளித்த கனடாவிற்கான தூதுவர், “நீங்கள் உங்கள் பொதுஜன பெரமுன கட்சியின் பிரமுகர்கள் சிலர் யாரை சந்திக்கின்றனர் என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு மீண்டும் பதிலளித்த நாமல் ராஜபக்சாஷ “இலங்கை ஒரு இறையாண்மை நாடாகவும் மக்களின் சிறந்த உறைவிடமாகவும் காணப்படுகின்றது. அந்த இறையாண்மையை பேணுவது அனைத்து தலைவர்களின் கடமையாகும், இதில் தேர்தலும் அடங்கும்” என கூறியுள்ளார். இந்த டுவீட்டர் கருத்துப் பரிமாற்றம் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.