இலங்ககையில் கரிகாற்சோழன் விருது

மலேசியா ,கோலாலம்பூர் – தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில்நிறுவப்பட்டுள்ள தமிழவேள்கோ. சாரங்கபாணி இருக்கையின்  சார்பாக ஆண்டுதோறும் மலேசிய,  சிங்கப்பூர், இலங்கைநூல்களுக்கு  விருதும் பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகின்றது.

அத்திட்டத்தின்கீழ் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த மலேசிய நூலாக அமரர் இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் ‘தொல்காப்பியக்  கடலின் ஓருதுளி’ எனும்  நூல் வாகைக்சூடியது.

இதற்கான விருதளிப்பு விழா எதிர்வரும் 21.1.2017 ஆம் தேதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடை பெறுகிறது.

தமிழகத்திலிருந்து  மலேசிய, சிங்கப்பூர்  படைப்புகளுக்கு  உரிய, அங்கீகாரம் வந்து சேரவேண்டும்ன்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளின்  அடிப்படையில்  தஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத்தில் தமிழ் வேள்கோ. சாரங்கபாணி பெயரில் இருக்கையை சிங்கைத்  தொழிலதிபர் தமிழ்  நெஞ்சர்  முஸ்தாபா உருவாக்கினார்.

மலேசிய, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் நூல்களை ஆண்டுதோறும்  தேர்வு செய்து அவற்றில் ஒரு சிறந்த நூலுக்கு இதன் மூலம் கரிகாற்சோழன் விருது வழங்கப்படுகிறது.

இலங்கை எழுத்தாளர்களும் இந்தப்பரிசுத்திட்டத்தில்  இந்து பயனடைய வேண்டுமென்ற நோக்கத்தில்  வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது..  அதன்  அடிப்படையில் 2015 ஆம் ஆண்டின் போட்டியில் மூன்று நாட்டு எழுத்தாளர்களும் பங்கு பெற்றனர்.

அவர்களில்  ஒவ்வொரு நாட்டுக்கும்  தலா ஒரு நூல்  தேர்வு செய்யப்பட்டு அதன்பரிசளிப்பு விழா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடை பெறவிருக்கிறது. சுழல் முறையில்  தஞ்சாவூர்,  மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய பகுதிகளில் இந்த விருதளிப்பு நடை பெற்று வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவின் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ‘தொல் காப்பியக் கடலின் ஒருதுளி’ நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள், கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள்  ஆற்றிய உரையின் தொகுப்பாகும்