இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை செய்யப்படும் – இலங்கை அரசு

இலங்கையில் மாடுகளை வெட்ட தடை கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை பார்லி., வளாகத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டதில் பேசிய பிரதமர் ராஜபக்ஷே நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சட்டம் கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறது என தெரிவித்து உள்ளார் . விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவைடைந்த பின்னர் மேற்கண்ட தடை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு பதிலாக வெளிநாடுகளில் இருந்து இறைச்சிகளை இறக்குமதி செய்யவும்முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.