இரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா – அடுத்து என்ன?

இரான் மீது விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடை, இரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மீதும் சேர்த்து விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த தடை முடிவு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது மற்றும் பல விஷயங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்டது என ட்ரம்ப் கூறியுள்ளார்.

போர் தாகம்
இரான் நாட்டின் உயர் தலைவர் என்பதால் இரானின் எதிர்ப்பு செயல்களுக்கு அயத்துல்லா கமேனியே காரணம் என்று அமெரிக்கா அவரை கண்காணிப்பில் வைத்திருந்தது.

அமெரிக்கா அமைதியை விரும்பவில்லை என இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார். இந்த தடை அறிவிப்புக்குப் பின்னர் சாரிஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம் `போர் தாகத்தில் இருக்கிறது` என குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக இந்த இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

ஆனால் பில்லியன் டாலர்களை முடக்கும் ட்ரம்பின் இந்த ஆணை அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தும் முன்பாகவே இருந்தது என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் நுசின் கூறியுள்ளார்.

ஐநா பாதுகாப்பாளர்கள் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிக்க கோரி கூறியுள்ளனர்.

எட்டு இரானிய இராணுவ தலைவர்கள் இந்த ஆணையால் பாதிக்கப்படுவர் என அமெரிக்க கருவூல துறை கூறுகிறது.

வெளியுறவுத் துறை அமைச்சர் சாரிஃப் மீதும் இது இந்த வாரத்திற்குள் இந்த ஆணை பிறப்பிக்கப்படும் என மனுசின் கூறியுள்ளார்.

அயத்துல்லா அலி கமேனி மேல் விதிக்கப்பட்ட இந்த தடை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் இரானிய நாட்டின் அதி உயர் தலைவர் ஆவதால் அவருடைய வார்த்தையே இரானிய அரசியலிலும் இராணுவத்திலும் கட்டளையாக ஏற்கப்படும். அதுமட்டுமல்லாமல் அவரிடம் பொருளாதார சக்தி அதிகம் உள்ளது.

போர் நடந்தால் இரான் ‘அழிந்துவிடும்’ – டிரம்ப் எச்சரிக்கை
இரான் மீது அமெரிக்கா நடத்திய சைபர் தாக்குதல் – அதிகரிக்கும் பதற்றம்
95 பில்லியன் டாலர்கள்

செடட் என்னும் நிறுவனம் ஒன்று அலி கமேனி கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனம் 1979 புரட்சி பிறகு கைவிடப்பட்ட சொத்துகளை கையகப்படுத்தி 95 பில்லியன் டாலர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய வணிக நிறுவனமாக மாறியது.

செடட் மீது அமெரிக்கா முன்பே தடை விதித்துள்ளது. ஆனால் ட்ரம்ப் இன்னும் முடக்க வேண்டுமென நினைத்தால் அயத்துல்லாவோடு தொடர்புடைய அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளையே இதற்குள் கொண்டுவரவேண்டும்.

எண்ணெய்க்கும் நிதி பரிவர்த்தனைக்கும் இவ்வாறு தீவிரத்தடை விதித்து அமெரிக்க அரசு எல்லா பக்கங்களிலிருந்தும் நெருக்கடி கொடுப்பதால் இரான் தோல்வியை ஒப்புகொண்டு அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கிறது அமெரிக்க அரசு.

இரான் அணு தொடர்பான வேலையை நிறுத்திக் கொண்டு ஏவுகணை, தயாரிப்பை முடக்கிவிட்டு, அரபு நாடுகளுக்கு இராணுவ உதவி செய்யாமல் இருப்பதே அமெரிக்காவின் கோரிக்கை ஆகும்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதை தனது முக்கிய குறிக்கோளாக வைத்திருக்கும் பாம்பேயோ, இரானிய அரசு தன்னை மாற்றிக் கொள்ளுமென நம்பிக்கையில்லை என கூறியுள்ளார்.

இரான் அணு ஒப்பந்தம்; டிரம்ப் எதிர்த்தாலும் உலக நாடுகள் ஆதரவு
இஸ்ரேலும், இரானும் ஏன் சண்டையிடுகின்றன? – 300 வார்த்தைகளில்
மீண்டும் மீண்டும் தடை ஏன்?
2015 அணு ஒப்பந்தத்தின் படி நீக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும் மீண்டும் இரான் மீது 2018ம் ஆண்டு சுமத்தியது அமெரிக்கா.

இதன் காரணமாக மோசமாக இரான் பாதிக்கப்பட்டது.ஆற்றல், கடல் போக்குவரத்து மற்றும் நிதித் துறை பாதிக்கப்பட்டது.

ஒரு வருடத்திற்கு பிறகு இரானிடம் வாங்கும் நாடுகளுக்கு அழுத்தம் தந்தது அமெரிக்கா.

அமெரிக்க அரசு அமெரிக்க நிறுவனங்களை மட்டுமல்லாமல் மற்ற நாட்டு நிறுவனங்களையும் இரானுடன் ஒப்பந்தம் செய்வதை தடுத்தது.

இதனால் இறக்குமதி செய்யும் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் நாப்கின்கள் போன்ற அயல்நாட்டு பொருட்களால் செய்யப்படும் பலபொருட்களின் பற்றாக்குறை இருந்தது.

நாட்டின் நாணய மதிப்பு சரிந்ததோடு எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறியது.

இது குறித்து கருத்து தெரிவித்த இரான் அரசு சில அணு ஒப்பந்தங்களை கைவிட முடிவு செய்திருப்பதாக கூறியது. மேலும் ஐரோப்ப நாடுகள் இந்த அமெரிக்க தடையிலிருந்து இரானை காக்கும் என கொடுத்த தங்கள் வாக்குறுதியிலிருந்து மாறுபடுவதாக குற்றம் சாட்டியது..

இது குறித்து கருத்து தெரிவித்த இரான் அரசு சில அணு ஒப்பந்தங்களை கைவிட முடிவு செய்திருப்பதாக கூறியது. மேலும் ஐரோப்ப நாடுகள் இந்த அமெரிக்க தடையிலிருந்து இரானை காக்கும் என கொடுத்த தங்கள் வாக்குறுதியிலிருந்து மாறுபடுவதாக குற்றம் சாட்டியது.