Go to ...
Canada Uthayan Tamil Weekly
* குஜராத் தேர்தலில் பாக்., குறுக்கீடு; பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு    * நியூயார்க்கில் பயங்கரம்: சுரங்க பாதையில் குண்டு வெடிப்பு பலர் காயம் என தகவல்    * இத்தாலியில் நடந்தது அனுஷ்கா-விராட் கோலி திருமணம்    * இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு    * சிரியாவிலிருந்து ரஷ்ய துருப்புகளை திரும்பப் பெற புதின் ஆணை
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Monday, December 11, 2017

இரண்டு ஈழம் சார்ந்த முழு நீளத் திரைப்படங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஸ்காபுறோவில் இடம்பெற்றது


06-09-2017 புதன் அன்று ஸ்காபரோ நகரில் நடைபெற்ற இரண்டு ஈழம்சாரந்த் முழுநீளத் திரைப்படங்களுக்கான ஊடகவியலாளர்கள், திரைத்துறைசார் நண்பர்கள் கலந்து கொண்ட சந்திப்பு இனிதே நடந்தேறியது.

3001 மார்க்கம் வீதியில் அமைந்துள்ள Golden Cultural Centre ல் மாலை 6.00 மணிக்கு நடந்த இந்த நிகழ்வில் , யாழ்ப்பாணத்திலிருந்து முழுமையாக எமது மண்ணின் மொழி பேசிக்கொண்டு, ஒரு முழுநீளத் திரைக்காவியமாக, மென்மையான காதல் கதையுடன் “மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” என்னும் படத்தின் முன்னோட்டமும், அதில் பணிபுரிந்தவர்களின் ஒளிப்பதிவு செய்யப்பட்ட செவ்விகளும் காண்பிக்கப்பட்டன.

முன்னோட்டம் பெரும் ஆர்வத்தைத் தூண்டுவதாக வந்திருந்தவர்களும், ஏற்கனவே படத்தைப் பார்த்தவர்கள் இது நிச்சயமாக அனைவரும் சென்று ரசிக்கும் படமென்றும் சொல்லிச் சென்றனர். இப்படத்தினை லண்டனிலிருந்து உதயரூபன் தயாரித்திருந்தார். பல தேசியப் படைப்புகளையும் இதர படங்களையும் இயக்கிய வினோதனின் இயக்கத்திலும், சுதர்சனின் இசையிலும் படம் உருவாகியிருக்கின்றது. இசையமைப்பாளர் சுதர்சன் அவர்கள் தற்போது கனடாவில் வசிக்கின்றார். நிகழ்விற்கு வருகை தந்திருந்தார்.

“இதுகாலம்” திரைப்படம் சுவிஸ் நாட்டில் படமாக்கப்பட்டது. காதல் மற்றும் சமுதாயக்கருத்துடன் வந்திருக்கின்றது.இப்படத்தினை இயக்கி, தயாரித்தவர் சுவிஸில் வாழும் குணபதி ஆவார். இசை ரவிப்பிரியன், ஒளிப்பதிவு ரவி அச்சுதன். கனடாவைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் கதாநாயகன் டானிஸ் ராஜ் மற்றும் நிதா நவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். “மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” படத்தினை “ஆரபி புரடக்சன்” ரஜீவனும், “இது காலம்” படத்தினை “காஞ்சி கிரியேசன்ஸ்” காஞ்சனாவும் கனடா உரிமையைப் பெற்று இங்கே இப்படங்கள் திரையிடுவதற்கு காரணமானவர்களாவார்கள்.

இந்த நிகழ்வை, ஈழத்தமிழ் திறமைகளுக்கு ஆதரவு வழங்கும் சேவையினை ஆற்றிவரும் “படைப்பாளிகள் உலகம்” நிறுவனர்; ஐங்கரன் கதிர்காமநாதன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும். “மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” வுட்சைட் திரையரங்கில் இந்த மாதம் 16 ம் , 17 ம் திகதிகளில் மதியம் ஒரு மணிக்கும்
“இது காலம்” யோர்க் திரையரங்கில் இந்த மாதம் 30 ம் திகதி பிற்பகல் 6 மணிக்கும் காட்சிப்படுத்தப்படும்.

தொடர்புகளுக்கு :ஆரபி புரடக்சன்- ரஜீவன் 416-509-4450 காஞ்சி கிரியேசன்ஸ் -காஞ்சனா 647-716-2599
படைப்பாளிகள் உலகம்- ஐங்கரன் 416-568-0039

One Response “இரண்டு ஈழம் சார்ந்த முழு நீளத் திரைப்படங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஸ்காபுறோவில் இடம்பெற்றது”

  1. September 24, 2017 at 11:29 pm

    GOOD JOP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2