இயக்கம், நடிப்பில் பிசியாகிய சமுத்திரகனி!

சாட்டை படத்திற்கு பிறகு பிசியான நடிகராகி விட்டார் டைரக்டர் சமுத்திரகனி. என்றாலும் படங்களில் பிசியாக

நடித்தபடியே நிமிர்ந்து நில், அப்பா போன்ற தரமான படங்களையும் இயக்கினார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த விசாரணை படத்தில் பெஸ்ட் சப்போர்ட்டிங் நடிகருக்கான தேசிய விருதினையும் பெற்றார். தற்போது சில மலையாள படங்களில் நடிப்பவர், தமிழிலும் வடசென்னை உள்பட பல படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும், இப்படி நடிப்பில் பிசியாக இருக்கும் அவர், அடுத்தபடியாக இயக்குவதாக இருந்த கிட்னா படத்தை தள்ளி வைத்து விட்டு, இன்னொரு புதிய படத்தை இயக்கும் வேலைகளில் தற்போது இறங்கியிருக்கிறார் சமுத்திரகனி. இந்த படத்தில் விக்ராந்துடன் தானும் கதைக்கு முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்கிறார். அதோடு அவருக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையும் நடிக்கிறாராம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.