இமாச்சல் பா.ஜ., எம்.பி உடல் சடலமாக மீட்பு

இமாச்சல் பிரதேச பா.ஜ., எம்பி ராம் ஸ்வரூப் ஷர்மா உடல் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு முறை பார்லி உறுப்பினராக இருந்த பா.ஜ., எம்.பி., ராம் ஸ்வரூப் ஷர்மா, 62, டில்லி ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அருகே உள்ள கோமதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் மனைவியுடன் தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று (மார்ச் 17) காலையில், அவரது மனைவி கோயிலுக்கு சென்றிருந்த சமயத்தில், தூக்கில் தொங்கிய நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால், அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இமாச்சல பிரதேசம், மாண்டி தொகுதியை சேர்ந்த பாஜக எம்பி ஸ்ரீ ராம் ஸ்வரூப் சர்மா, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. போலீசார் கதவை திறந்தபோது, மின்விசிரியில் ராம் ஸ்வரூப் சலடமாக தொங்கி கொண்டிருந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைக்கு பின் பேசலீசார் கூறினார். அதற்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர். மாண்டி தொகுதியில் இருந்து 2014, 2019 இரண்டு முறை எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டவர் ராம். அவருக்கு மரியாதை செலுத்த மதியம் வரை லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. எம்பி ராம் ஸ்வரூப் அர்ப்பணிப்புடன் செயல்பட கூடியவர்; மக்கள் பிரச்னையை தீர்க்கவும், சமுதாய முன்னேற்றத்திற்கு அயராது உழைத்தவர் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அவரது ஊழியர் காவல்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்த ராம் ஸ்வரூப் ஷர்மா, கடந்த மூன்று நாள்களுக்கு முன்புதான் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். ஏற்கனவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றதும் தெரிய வந்துள்ளது.