இமயமலை பனிப்பொழிவில் சிக்கி பட்டினியால் மடிந்த மலை மாடுகள்

கடுமையான பனிபொழிவில் சிக்கிக்கொண்டதால் சீனா உடனான இந்திய எல்லையில் அமைந்துள்ள இமையமலைப் பகுதியில் குறைந்தது 300 மலை மாடுகள் உணவின்றி, பட்டினியால் உயிரிழந்துள்ளன.

வெள்ளியன்று, சிக்கிம் மாநிலத்தில் உள்ள முக்குதாங் பள்ளத்தாக்கில் அந்த மாடுகளின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என்று ராஜ் யாதவ் எனும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பனிப்பொழிவு அதிகமுள்ள பகுதியில், சென்ற டிசம்பர் மாதம் முதலே அந்த மலை மாடுகள் சிக்கியிருந்தன. ஹெலிகாப்டர் மூலம் அவற்றுக்கு உணவைக் கொண்டு சேர்க்கும் அரசு அதிகாரிகளின் முயற்சி மோசமான வானிலை காரணமாக சாத்தியமில்லாமல் போனது.

பல்லாயிரம் ஆண்டுகளாகவே இமயமலைப் பகுதிகளில் வாழும் இந்த மாடுகள் உணவு மற்றும் பால் தேவைகளுக்காக மட்டுமல்லாது பொதி சுமக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

2100-ல் இமயமலை பனிமலைகளில் மூன்றில் ஒரு பங்கு இருக்காது – அதிரவைக்கும் ஆய்வு
சூழலியல் மீதான தாக்குதல்: ‘அழியும் உயிரினங்கள்’ – எச்சரிக்கும் வல்லுநர்கள்
அந்த மாடுகள் சிக்கியிருந்த பகுதிக்குச் செல்லும் பாதை ஐந்து நாட்களுக்கு முன்புதான் சுத்தம் செய்யப்பட்டது என்றும், அதன் பின்னரே இந்தத் துயர்மிகு நிகழ்வு கண்டறியப்பட்டது என்றும் ராஜ் யாதவ் தெரிவிக்கிறார்.

ஆண்டுக்கு 10-15 மலை மாடுகள் அங்கு உயிரிழப்பது இயல்பு என்றாலும் ஒரே சமயத்தில் அங்கு இத்தனை மாடுகள் இறப்பது இதுவே முதல் முறை.

இன்னும் அங்கு சிக்கியுள்ள சுமார் 50 மலை மாடுகளைச் சென்றடையும் முயற்சி தொடர்ந்து வருகிறது.