இன்னும் ஆரவ்வை காதலிக்கிறீர்களா? – ரசிகரின் கேள்விக்கு ஓவியா பதில்

சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது முதலே அவருக்கு பெரும் ஆதரவு பெருகியிருப்பதால், மக்கள் கூட்டம் கடுமையாக காணப்பட்டது.

இவ்விழாவில் ஓவியா பேசியதாவது:

பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை அதைப் பற்றி பேசக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகையால் யார் ஜெயிப்பார்கள் என்று சொல்ல முடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100-வது நாள் விழாவில் என்னைக் காணலாம். மேலும், அந்நிகழ்ச்சியில் எனக்கு அனுயாவை ரொம்பப் பிடிக்கும். அவர் எனக்கு நெருங்கிய தோழி.

இந்தக் காலத்தில் மக்களிடையே இவ்வளவு பெரிய அன்பு கிடைப்பது ரொம்ப கஷ்டம். எனது கதாபாத்திரத்தால் அந்த அன்பு கிடைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி

இவ்வாறு ஓவியா பேசினார்.

அதனைத் தொடர்ந்து “இன்னும் ஆரவ்வை காதலிக்கிறீர்களா” என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “எனக்கு உங்கள் அனைவரிடம் இவ்வளவு அன்பு இருக்கும் போது, ஏன் நான் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும். உங்கள் அனைவரையும் காதலிக்கிறேன்” என்று பதிலளித்தார் ஓவியா.