இனப்பிரச்சினைக்கு இடமளிக்காது வடக்கு அபிவிருத்தியில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்கிறார் ஜனாதிபதி மைத்திரி

மீண்டுமொரு இனரீதியான பிரச்சினைகளுக்கு இடமளிக்காமல் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அபிவிருத்தி உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு அர சாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்துள்ளார். திருகோணமலையில் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 1947 முதல் ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்களும் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டுமே வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளை பயன்படு த்திக் கொண்டார்களே தவிர, அம்மக்களின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சி னைகளை தீர்க்கக்கூடிய அரசியல் பின்பு லத்தை அமைக்கவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் அனைத்து அரசாங்க ங்களும் குறைந்தளவு கவனம் செலுத்தியு ள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, வடக்கு, கிழ க்கு இனப்பிரச்சினைக்கு பல விடயங்கள் அடிப்படையாக இருந்தபோதிலும் தகுந்த அரசியல் தலைமை அப்பிரதேசங்களில் பிரதிபலிக்காதது முக்கிய காரணமாக அமைந்துள்ளதென்றும் தெரிவித்தார். ஒரு மாகாணத்தை, அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு அம்மாகாண த்தில் குறைந்தபட்சம் ஒரு அமைச்சரவை அமைச்சுப் பதவியாவது வழங்கப்பட வேண் டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை பிளவுபடுத்தாத அதிகார பகிர்வு எனப்படும் எண்ணக்கரு அப்போதே யதார்த்த மாகு மென்றும் தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர் அப்போதைய அரசா ங்கத்தினால் சரிவர கடமைகளை நிறை வேற்றாததன் காரணமாகவே 2015 ஜனவரி 08 ஆம் திகதி நாட்டின் மக்கள் தன்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தார்கள் எனத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த மூன்றரை வருடங்களாக அப்பணிகளை மேற்கொள்வ தற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணி ப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார். யுத்தம் நிலவிய பிரதேசங்களில் மக்களிடையே நில வும் அச்சத்தை தீர்க்கும் முகமாக இன, மத ரீதியான நல்லிணக்கத்தை உருவாக்குவ தற்கு அரசு பாரிய பங்காற்றியுள்ளதென்பதை யும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

அதனூடாக மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனா திபதி, எவ்வாறான சவால்களுக்கு முகங் கொடுக்க நேர்ந்தாலும் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற் படுவதாகவும் குறிப்பிட்டார்.