இந்த காவிய திரைப்படம் டிராப் ஆவதற்கு விஜய் தான் காரணமா?

இயக்குனர் மணிரத்னத்திடம் அனைவரும் எதிர்ப்பார்த்த ஒரு படம் பொன்னியின் செல்வன்.

அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் பொன்னியின் செல்வன் படம் டிராப் ஆனது பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர், முதலில் படக்குழுவினர் கோவில்களில் படமாக்க சரியான உத்தரவு வாங்கவில்லை. பின் செட் போட்டு எடுக்கலாம் என்று பார்த்தாலும் ரூ. 50 கோடி வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

இதனாலேயே இந்த படம் டிராப் ஆனது என்று கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்யை படக்குழுவினர் அணுகியதாக ஒரு தகவலும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.