இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம் கடலில் விழுந்தது

இந்தோனேஷியாவில் ஜகர்த்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகி உள்ளது.

ஜகர்த்தாவில் இருந்து பங்கக்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லையன் ஏர் விமானம், புறப்பட்ட 13 நிமிடங்களில் நடுவானில் மாயமானது. காலை 6.33 மணிக்கு விமானத்துடனான தகவல் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து மாயமான விமானத்தை தேடிய போது, அது இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது தெரிய வந்துள்ளது.

210 பேர் பயணிக்கும் வசதி கொண்ட 737 போரிங் ரக விமானத்தில் விமான பணியாளர்கள் உள்ளிட்ட 188 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. விமானத்தின் உடைந்த பாகங்கள், இருக்கைகள் ஜாவா கடல் பகுதியில் மிதப்பதாக தெரிய வந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.