இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் முக்தியடைந்தார்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் இன்று (செப்.,30) முக்தியடைந்தார். அவருக்கு வயது 94.

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் வீரத்துறவி ராமகோபாலன் (94). கடந்த 27 ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவர் விரைவில் குணம்பெற வேண்டி, இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளட்ட பலர் வேண்டி கொண்டனர்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் முக்தியடைந்தார். அவரது மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் ஆசி பெற்றவரும் வேத பரம்பரையில் வந்தவரும் ஸ்ரீ ராம பக்தருமான ஸ்ரீகாயத்ரி உபாஸகரும்
ஸ்ரீ ராமகோபாலன், தம் வாழ்நாள் முழுதும், இந்து மதத்திற்கும் தமிழகத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மிகப்பெரிய சேவை செய்தவராவார்.