- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

இந்துக் கல்லூரியி பழைய மாணவர்கள் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவு விழா
யாழ்ப்பாணம்- காரைநகர் இந்துக் கல்லூரியி பழைய மாணவர்கள் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கனடா- ஸ்காபுறோ நகரில் உள்ள ஶ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாண்டின் பிரதம விருந்தினராக மருத்துவர் இராமலிங்கம் செல்வராஜாவும் அவரது பாரியார் மருத்துவர் சறோ செல்வராஜாவும், சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற இலங்கையின் பிரதி நில அளவையாளர் நாயகம் திரு முருகேசு வேலாயுதபிள்ளை அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்
விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக தமிழ்நாடு விஜேய் தெலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் புகழ் பாடகர் ஸ்ரவன் சிறந்த தமிழிசைப் பாடல்களையும் பக்திப் பாடல்களையும் வழங்கினார். அவருக்கு பக்கவாத்தியக் கஞைர்களாக திருவாளர் ஜெயதேவன் நாயர் ( வயலின்) ரதிரூபன்( மிருதங்கம்) நரேந்திரன் (தபேலா )ஆகியோர் இருந்து அற்புதமாக இசைக்கருவிகளை வாசித்தார்கள். பாடகர் ஸ்ரவன் வழங்கிய பாடல்களை ரசித்த சபையோர் அவருக்கு பரிசாக கரகோசங்களை வழங்கினார்கள்.