- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

இந்துக்கள் எங்களுடைய எதிரிகள்; பாகிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சை பேச்சு
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கைபர் பக்துன்குவா மாகாண சட்டமன்ற உறுப்பினரான ஷேர் ஆசம் வாசீர் அவையில் பேசும்பொழுது, இந்துக்கள் எங்களுடைய எதிரிகள் என கூறினார். இவரது பேச்சுக்கு அங்கு சிறுபான்மை சமூக உறுப்பினர்களாக உள்ள ரவி குமார் மற்றும் ரஞ்ஜித் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
எனினும், வார்த்தைகளை தேர்வு செய்ததற்கு மன்னிப்பு கேட்டு கொண்ட வாசீர், இந்துக்கள் என்பதற்கு பதிலாக இந்துஸ்தான் (இந்தியா) என கூறியிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதன்பின், எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்களுக்கு மற்ற உறுப்பினர்கள் நம்பிக்கையூட்டி மீண்டும் அவைக்கு கொண்டு வந்தனர்.
இதுபற்றி ரவிகுமார் கூறும்பொழுது, பாகிஸ்தானுக்கு பகை நாடாக இந்தியா உள்ளது என்றாலும், இந்து சமூகம் இல்லை என கூறியுள்ளார். வாசீரின் சட்டசபை பேச்சுகளை சபாநாயகர் முஷ்டாக் கனி குறிப்பில் இருந்து நீக்கி விட்டார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் பாதுகாப்பு படையினர் மீது நடந்த தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் போலீசார் பலியாகினர். இதற்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் உருவானது. இந்த தாக்குதலுக்கு, இந்திய விமான படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்க முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.