இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி

அமெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் என்ற பெண், 2020ம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக களத்தில் இறங்குகிறார்.

சென்னையில் இருந்து அமெரிக்கா சென்ற தமிழ் வம்சாவளி பெண் கமலா,ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வாருகிறார். இதன் முதற்கட்டமாக கடந்த வாரம் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல்கள் நடந்து முடிந்தது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

கமலா தேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். தனது சிறு வயதில் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் வசித்திருந்தார். இவரது தாய் ஸ்யாமலா தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர் மற்றும் தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர்.

பின் வரும் நாட்களில் தனது இளமைப் பருவத்தை நெருங்கும்போது தன் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். தற்போது கலிபோர்னியாவில் கமலா தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அமெரிக்காவில், அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்ட்ர்னி ஜெனரல் பதவியை வகித்து வரும் இவர், 1990ம் ஆண்டு அரசியலில் தீவிரமாக களமிறங்கினார். தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர், 2016ம் ஆண்டு செனட்டர் தேர்தலில் வெற்றிப்பெற்று கலிபோர்னியாவின் செனட்டராக பதவியில் இருக்கிறார். அமெரிக்காவில் அதிகம் விரும்பப்படும் செனட்டர்களில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார். நிற வெறிக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர் கமலா.

அமெரிக்கா தேர்தல் 2020 : களமிறங்கும் கமலா தேவி ஹாரிஸ்
2020 அமெரிக்காவில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றிபெறும் என்று கூறப்படுகிறது. அதற்காக அக்கட்சியின் சார்பாக கமலா தேவி ஹாரிஸ் தான் அதிபர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அதே சமயம் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பாக டிரம்பிற்கு பதில் வேறு ஒருவர் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஜனநாயக கட்சியில் அதிபர் தேர்தலில் போட்டியிட ஏற்ற வேட்பாளர்களில் இவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கட்சியில் இவருக்கு 70 சதவிகித உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே கட்சியில் உள்ள இன்னொரு பெண்ணான துளசி கப்பார்ட் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள நபர்களில் 4வது இடத்தில் இருக்கிறார்.

இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெறுவதற்கான களப் பணிகளில் கமலா ஈடுபட்டு வருகிறார். அதற்காக நிதி வசூலில் இப்போதே இறங்கியுள்ளாராம். மேலும் தேர்தல் பணிக்கு ஆயத்தமாகும் அனைத்து முயற்சிகளையும் இவர் மேற்கொண்டு வருகிறார். இவற்றை பார்க்கும்போது, கமலா தேவி ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ஒருவேளை விடா முயற்சியால், 2020ம் தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு கமலா வெற்றிப்பெற்றால், முதல் அமெரிக்க பெண் அதிபர் ஆவார். அதுவும், இந்தியா வம்சாவளி மற்றும் தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர் என்பதால் முதல் கருப்பிண பெண் அதிபர் என்றும், முதல் இந்தியா வம்சாவளி பெண் திபர் என்ற சிறப்பு அம்சமும் கொண்டு வெற்றிப்பெற்றவராக திகழ்வார்.