Go to ...
Canada Uthayan Tamil Weekly
* கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி    * நடிகைகள் பாலியல் புகார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரண்    * குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த்- எடியூரப்பா    * ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, May 25, 2018

இந்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்


இந்திய பட்ஜெட், சாமான்யர்களுக்கான பட்ஜெட் என பிரதமர் மோடி கூறினார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக, பிரதமர் மோடி, டிவி மூலம் ஆற்றிய உரை;
பட்ஜெட் புதிய இந்தியாவை வலிமைபடுத்துவதாகவும், வளர்ச்சியை வேகப்படுத்துவதாகவும் உள்ளது. 125 கோடி மக்களுக்கான பட்ஜெட்டாக உள்ளது. மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும்.விவசாயிகளின் அச்சம் போக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

விளைபொருட்களை விற்பனை மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்ல வழிவகுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10 கோடி ஏழைகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியதாவது: நிதி ஒருங்கிணைப்பு சோதனையில் ஜெட்லிக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. ஜெட்லியின் தோல்வி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது: நாடு பொருளாதாரம் வீட்டு பொருளாதார வளர்ச்சி கொண்ட ஆரோக்கிய பட்ஜெட். விவசாயிகளுக்கு கடன் அட்டை கொடுப்பது போல், மீனவர்களுக்கு கடன் அட்டை கொடுக்கப்பட உள்ளது.

மத்திய அமைச்சர் கட்கரி: 10 கோடி குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு மிகப்பெரிய திட்டம். வரலாற்று சாதனை மிக்க பட்ஜெட்.

பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்: கல்வி, சுகாதாரம், விவசாயம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில், தேசிய சுகாதார திட்டம் அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை. இதற்காக அரசை பாராட்டுகிறேன்.

மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா: விவசாயிகளை மேம்படுத்த நிதியமைச்சர் முயற்சி செய்துள்ளார். ஆனால், கிராமப்புற விவசாயிகளின் பிரச்னை பெரியது.

தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: 2019 தேர்தலை கொண்டு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ரயில் திட்டங்களை ஒரு வருடத்தில் நிறைவேற்ற முடியுமா? இது கார்ப்பரேட் அரசாங்கம். இந்த வருடம் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2