- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி, நடிகை அனுஷ்கா நிச்சய தேதி அறிவிப்பு!!
இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா ஜோடியின் நிச்சயதார்த்தம் வரும் ஜனவரி 1 நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகின்றனர். இவர்களின் காதலை திருமணம் வரை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
உத்தர்காண்டின் ரிஷிகேசில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உள்ள நரேந்திர நகருக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளனர் கோலி மற்றும் அனுஷ்கா.
இருவரும் அங்கேயா தங்களது, நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் இரு குடும்பத்தாரின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.