இந்திய குண்டுவீச்சு விமானங்கள் தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்

பாகிஸ்தானின் வடகிழக்கில் உள்ள பலகொட் கிராமத்தை சேர்ந்தவர்கள் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை பூகம்பம் போன்ற சத்தத்தினால் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தனர்.எனினும் பின்னர் அவர்களிற்கு அது இந்திய விமானப்படையின் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட சத்தம் என்பது தெரியவந்தது.இந்திய அதிகாரிகள் இந்த தாக்குதல் காரணமாக காஸ்மீரில் 40 படையினர் கொல்லப்படுவதற்கு காரணமான தீவிரவாத அமைப்பின் முகாமை அழித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

1971ற்கு பின்னர் பாக்கிஸ்தானில் உள்ள பகுதியொன்றில் இந்தியா முதல்தடவையாக மேற்கொண்ட விமானதாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்எனினும் இந்த தாக்குதலில் ஒருவரே காயமடைந்துள்ளார் என குறிப்பிடும் கிராமத்தவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

அருகில் தீவிரவாத அமைப்பினால் நடத்தப்படும் மத்ரசா ஒன்று உள்ளது என தனது பெயரை குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் தெரிவிக்கின்றார்.மலைஉச்சியில் மத்ரசா ஒன்று உள்ளது, ஜய்சீ -ஈ- முகமட் அமைப்பு அதனை நிர்வாகம் செய்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த பகுதியில் பல வருடங்களாக தீவிரவாதிகளின் பிரசன்னம் காணப்படுவதாக பெயர் குறிப்பிடவிரும்பாத மற்றொருவர் தெரிவித்தார்.நான் அந்த பகுதியை சேர்ந்தவன் அங்கு பயிற்சி முகாமொன்று இருந்ததுஎனக்கு தெரியும் அதனை அங்கு உள்ள தீவிரவாதிகள் இயக்கினர் என மற்றொருவர் தெரிவித்தார்.

பல வருடங்களிற்கு முன்னர் அவர்கள் அதனை மத்ரசாவாக மாற்றிவிட்டனர்,ஆனால் தற்போதும் எவரையும் அதற்கு அருகில் செல்ல அவர்கள் அனுமதிப்பதில்லை,அங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மலையும் காடுகளும் உள்ள பங்டுங்வா பிரதேசத்தில் அழகான கஹன் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்கு அருகில் பலகொட்அமைந்துள்ளது.

2005 இல் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் இந்த பகுதி பாரிய அழிவை சந்தித்தது.இந்திய விமானங்கள்இலக்குதவறிவிட்டன என கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர். மத்ரசாவிலிருந்து ஒரு கிலோமீற்றரிற்கு அப்பால் இந்த குண்டுகள் விழுந்துள்ளன எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த 25 வயது முகமட் அஜ்மல் அதிகாலை 3 மணிக்கு பின்னர் நான்கு பாரிய சத்தங்களை கேட்டதாக தெரிவிக்கின்றார்.

என்ன நடந்தது என எங்களால் அறியமுடியாத நிலை காணப்பட்டது,அதிகாலையிலேயே நாங்கள் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்தோம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.மரங்கள் முறிந்து காணப்பட்டன,ஒரு வீடு சேதமடைந்து காணப்பட்டது,குண்டுகள் வீழ்ந்த பகுதியில் நான்கு குழிகள் காணப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவினால் வீசப்பட்ட குண்டுகளின் பாகங்களை கிராமத்தவர்கள் மீட்டுள்ளனர் என பிடா ஹ_சைன் சா என்ற 46 வயது விவசாயி ஒருவர் ஜன்னல்களை துளைத்துச்சென்ற சிதறல்கள் காரணமாக வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்த ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கின்றார்.