- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

இந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 பேர் காயம்
ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள இந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 15 பேர் படுகாயமடைந்துள்ள இந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் டோரோண்டா ட்ராயுமா சென்டரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள சிபிசி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த பயங்கர சம்பவம் குறித்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாம்பே பேல் என்னும் இந்திய உணவகத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் உணவகத்தினுள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் குண்டு வெடிப்புக்குள்ளான இந்திய உணவகம் போலீசாரின் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.