இந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை

இந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவ பிரதான செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் லணடனில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் ஒரு கட்டுக்கதை என்றும் இந்தியா பாக்கிஸ்தானை இழிவுபடுத்தும் பொய்களைப் பயன்படுத்துவதாகவும் கூறினார். இந்தியா ஒருமுறை தாக்குதல் நடத்தினால் 10 முறை அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்.

எந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாலும் 10 நிமிடங்களுக்குள் பதிலடி கொடுக்க எங்களுக்கு சக்தி உண்டு. இது பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம்.

கிழக்கு மற்றும் மேற்கு எல்லை முழுக்க எங்கள் கைகளில் உள்ளன. இராணுவம் நாட்டின் பாதுகாப்பை பராமரிக்க வேண்டியுள்ளது. இராணுவம் பொறுப்புணர்வுக்கான தனது சொந்த கடுமையான நெறிமுறையைக் கொண்டுள்ளது. அது மிகவும் வலுவான மற்றும் கடினமானதாகும். இது பல்வேறு மட்டங்களில் நிகழ்கிறது.

“பாகிஸ்தானில் ஜனநாயகம் தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் உழைக்க வேண்டும்,” என ஆசிப் கபூர் கூறினார்.