Go to ...
Canada Uthayan Tamil Weekly
* மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்களை நீக்க முடிவு    * காங்கிரஸ் ஆட்சியில் உம்மன்சாண்டி பலாத்காரம் செய்தவர்கள் நடவடிக்கை:முதல்வர் பினராய் விஜயனுக்கு சரிதா நாயர்    * அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாக். தீவிரவாதி    * தற்கொலை படை தாக்குதல் : ஆப்கன் வீரர்கள் 43 பேர் பலி
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, October 20, 2017

இந்தியா முழுவதும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க சுமார் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்


சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் ரீஎன்ட்ரி ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா பீச்சர் போன் மற்றும் மூன்று ஸ்மார்ட்போன்களால் துவங்கியுள்ளது. சர்வதேச சந்தையை தொடர்ந்து நோக்கியா 3310 (2017), நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் அறிமுகம் செய்யப்பட்டு நோக்கியா 6 தவிர மற்ற சாதனங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகின்றன.
அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் நோக்கியா 6 முன்பதிவுகள் ஜூலை 14ம் தேதி துவங்கியது. ஆகஸ்டு 23ம் தேதி விற்பனைக்கு வர இருக்கும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்க முன்பதிவு செய்துள்ளனர் என அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.
நோக்கியா 6 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 1920ஒ1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஐPளு டுஊனு டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், மற்ற நிறங்கள் கொண்ட மாடல்களில் 3 ஜிபி ரேமும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், ஆர்ட் பிளாக் நிறம் கொண்ட மாடலில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து நிறம் கொண்ட மாடல்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
அமேசான் தளத்தில் நோக்கியா 6 வாங்கும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பே கணக்கில் ரூ.1,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. வோடபோன் வாடிக்கையாளர்கள் 1 ஜிபி டேட்டா வங்கும் போது 9 ஜிபி கூடுதல் டேட்டா ஐந்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. மைக்மைட்ரிப் தளத்தில் தங்கும் விடுதி மற்றும் விமான பணச்சீட்டுகளில் ரூ.2,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போல் அமேசான் கின்டிள் புத்தகங்களில் அதிகபட்சம் 80 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2